Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.03.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 07-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 07.03.2024

 

சோர்ந்து போகாதிருங்கள்

 

"…நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" - கலாத்தியர் 6:9

 

கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. விசுவாசி ஒருவர் தன்னோடு பயணம் செய்தவருக்கு நற்செய்தி பிரதி ஒன்றைக் கொடுத்தார். வாங்கியவர் சொன்னார், "நானும் கிறிஸ்தவன்தான். என் வாலிப காலத்தில் இப்படி கைப்பிரதிகளை மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு பயனும் இல்லை" என்றார். பிரதியைக் கொடுத்தவர் சொன்னார், "இப்படி ஒருவர் கொடுத்ததை நான் வாசித்து ஆண்டவரை ஏற்றுக் கொண்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு கிளாஸ்கோ நகரில் YMCA கட்டிடத்தின் முன்பாக ஒருவர் என் கையில் துண்டு பிரதியைக் கொடுத்தார். அதை வாசித்துத்தான் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு இன்றைக்கு ஊழியம் செய்கிறேன்." "இதைக் கேட்டுக் கொண்டிருந்த பயணி அதிர்ச்சியுற்றார். "நான்தான் அந்தக் காலத்தில் அந்த இடத்தில் கைப்பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். இதனால் பயனில்லை என்று அந்த ஊழியத்தை விட்டு விட்டேன். உங்களைப் போன்றோரை உருவாக்கிய அந்த ஊழியத்தை தொடராமல் விட்டுவிட்டேனே!" என்றார் மிகவும் சோகத்துடன்.  

 

வேதத்திலும் கூட நாம் பார்க்கும் போது பவுலை தேவன் தெரிந்துதெடுக்கிறார். அநேக ஜனங்களுக்கும், புறஜாதிகளுக்கும் இயேசுவின் திருஷ்டாந்தங்களை எடுத்துக் கூறுகிறார். பவுலைக் கொண்டு தேவன் அற்புதம் செய்கிறார். அநேக ஜனங்களை கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும்படி போதிக்கிறார். இன்னும் பல நிருபங்களை எழுதி முடிக்கவும் திருச்சபைகளை நிறுவவும் கர்த்தர் உதவி செய்தார். சபைகளுக்கு பக்திவிருத்தியான காரியங்களையும் சொல்லுகிறார். இதினிமித்தம் பல பாடுகள், சிறைவாசங்கள், அடிகள்பட்டாலும் சோர்ந்துபோகாமல் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றி முடிக்கிறார்.

 

இதை வாசிக்கிற பிரியமானவர்களே! நாமும் தேவனுக்காய் செய்யும் சிறுசிறு காரியங்களில் பலன் இல்லாதது போல் இருந்தாலும், பல முயற்சிகள் தோல்வி போல் காணப்பட்டாலும் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய ஊழியத்தை உற்சாகமாய் செய்வோம். என்னால் இந்த ஊழியத்தில் பலனில்லை தேவனுக்கு என்னால் பலனில்லை என்று கலங்காதிருங்கள், சோர்ந்து போகாதிருங்கள், தளர்ந்து போகாதிருங்கள். தேவபிள்ளையே! அர்ப்பணிப்புள்ள ஊழியம், உண்மையுள்ள ஊழியம், ஜெபத்தோடு செய்யும் ஊழியம் என்றும் பலனற்று போகாது! நிச்சயம் பலன் கொடுக்கும். தண்ணீரின் மேல் போடப்பட்ட ஆகாரம் அநேக நாட்களுக்கு பின் பலன் கொடுக்கும். உங்கள் வாயிலிருந்து புறப்பட்ட தேவ வசனம் ஒன்றும் வெறுமையாய் திரும்பாது. அல்லேலூயா!

- T. காமராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது மருத்துவமனை ஊழியங்களுக்கு அர்பணிக்கப்பட்ட மருத்துவர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet