Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.03.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 05-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 05.03.2024

 

எனக்குப் பெலனுண்டு

 

"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு" - பிலிப்பியர் 4:13

  

வில்மா ருடால்ப் என்ற பெண்மணி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் எப்படியாகிலும் வெற்றியுள்ள பெண்ணாக வாழவேண்டுமென்று தீர்மானித்து கடினமாக உழைத்தார். பெலவீனமான தனது நரம்புகள் பெலனடையும்படிக்கு சரியான உணவருந்தி கடினமான உடற்பயிற்சி செய்து வேகமாக ஓடும் அளவுக்கு உயர்ந்தார். 1960ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று, "உலகிலேயே வேகமாக ஓடும் பெண்மணி" என்ற பெயர் பெற்றார்.

   

ஷெல்லிமாள் என்ற பெண் ஐந்து வயதாக இருக்கும்போது இளம் பிள்ளைவாத நோயால் பீடிக்கப்பட்டார். ஆனால் அவருக்குள் காணப்பட்ட அளவிட முடியாத வெற்றி வேட்கையை இந்த நோயால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவரும் 1956ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றார்.

   

இருபது ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சைமன் ஏ. டோனப் என்று ஒருவர் விளையாடினார். இவர் வாலிபனாக இருக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் மருத்துவ உதவியோடு கடினமாக உழைத்து உடற்பயிற்சி செய்து தேசிய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக மாறினார்.

   

மேலே கூறப்பட்டுள்ள மூன்று மனிதர்களுமே வாழ்க்கையின் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களாக காணப்பட்டனர். ஆனால் இவர்கள் தங்கள் பெலவீனங்களை குறித்து யோசிக்காமல் வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்ற வேட்கையினாலும், சிந்தனையினாலும் உந்தப்பட்டார்கள். பரி. வேதாகமத்தில் பவுலடியார் இவ்வாறாக கூறுகிறார். என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்னில் காணப்படும்போது பெலவீனத்தில் பெலவானாய் இருக்கின்றேன் என சாட்சி கூறுகிறார். (2கொரி. 12:9) மேலும் பிலிப்பியர் நிருபத்தில் கூறும்போது, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு" என்கிறார். இச்செய்தியை வாசிக்கின்ற நீங்கள் ஏதேனும் ஒரு பெலவீனத்தில் கட்டப்பட்டவர்களாய் காணப்படுவீர்களென்றால் சோர்ந்துபோய் விடாதிருங்கள். உங்கள் பெலவீனம் மாற ஜெபியுங்கள், பிரயாசப்படுங்கள். கர்த்தர் உங்களுக்கு துணையாக நின்று உங்களை பெலப்படுத்துவார். (2 தீமோ. 4:17) ஆமென்!

- P. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

ஏழாயிரம் மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கை அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al