By Village Missionary Movement
Friday, 23-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 23.02.2024
பாதுகாப்பு யார்?
"யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்" - சங்.146:5
இந்த 2024ம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் கால் பதித்த நமக்கு இந்த வசனம் ஒரு நம்பிக்கையை தருகிறது அல்லவா? தேவனாகிய கர்த்தரிடத்தில் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நம்மை நேர் வழியாய் நடத்துவார். தீங்குக்கு நம்மை விலக்கி பாதுகாப்பார். "பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். " "உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன்வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது." "பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது," ஆம், நம்முடைய பாதுகாப்பு அவரிடமே உள்ளது.
காட்டிலே நாய் ஒன்று நரி தனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்பி இருந்தது. ஆனால் நரியோ ஓநாய் வந்ததும் ஓடிப்போனது. உடனே ஓநாய் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என எண்ணி ஓநாயிடம் வந்தது அந்த நாய். ஆனால் ஓநாயோ புலி வந்ததும் காணாமல் போய்விட்டது. புலி தான் வலிமையானது என எண்ணி புலியின் பாதுகாப்பை தேடியது அந்த நாய். ஆனால் புலியோ, வேடன் துப்பாக்கியுடன் வருவதைக் கண்டு அதிவேகமாக ஓடி தப்பியது. எனவே நாய் மிருகங்களை நம்பி பயனில்லை. இந்த வேடன்தான் எனக்கு பாதுகாப்பு என உணர்ந்து அவன் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு நடந்தது.
இந்த உலகில் மனிதர்களின் உறவு, பணம், பொருள், வேலை, படிப்பு, அந்தஸ்து ஆகிய யாவுமே நம்முடைய பார்வையில் நமக்கு உதவியானவையே! ஆனால் இவைகளினால் வரும் பலமோ, நம்பிக்கையோ, நிலையானது அல்ல. ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவைகள் மாறும், நம்மை தாங்கவும், நடத்தவும் முடியாமல் பின்வாங்கி போகும். எல்லா சூழ்நிலைகளிலும் நம்மோடு இருந்து தாங்கி நடத்துபவர் கர்த்தர் மட்டுமே!
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன், மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் என்றார் ஒரு தேவ மனிதர். ஆம், நம்முடைய நம்பிக்கையும் விசுவாசமும் சுற்றியுள்ள மனிதர்கள் மீது அல்ல நம் தேவன் மீதே இருக்கட்டும். நம் கண்கள் எப்போதும் அவரையே நோக்கி பார்க்கட்டும். அவரிடமிருந்து இந்த மாதம் மாத்திரமல்ல, வாழ்நாளெல்லாம் பாதுகாப்பு கிட்டும்.
- Mrs. பெர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு:
நமது டியூசன் சென்டரில் படிக்கும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864