Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.02.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 20-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 20.02.2024

 

ONLINE - OFFLINE

 

"…கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்கமாட்டா(து)…" - யோவான் 15:4

 

நாம் வாழும் இந்த உலகம் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மொபைல் போன் மிகவும் முக்கியமான பொருளாக மாறிப் போனது. மனிதனுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் இன்று மனிதனையே ஆண்டு கொண்டிருக்கிறது. அதில் இண்டர்நெட் கனெக்ன் மிகவும் முக்கியமானது. நெட் கனெக்ஷன் இருந்தால் மட்டுமே பலவித தகவல்களை அறிய அதை பயன்படுத்த முடியும். அதாவது அது online-ல் இருக்க வேண்டும். இல்லையேல் ஒரு ஓரமாக கிடக்கும், அதற்கு மதிப்பு இல்லை.

 

அதே போல் தேவனை அறிந்த நமக்கு தேவனோடு உள்ள தொடர்பு எப்போதும் online -ல் இருக்க வேண்டும். வேதாகமத்தில் தேவனோடு online -ல் இருந்தவர்கள் அநேகர் உண்டு.

 

1. யோசேப்பு தேவனோடு எப்பொழுதும் தொடர்பில் இருந்ததால் பாவத்திற்கு விலகி ஓட முடிந்தது.

 

2. யோசுவா தேவனோடு online -ல் இருந்ததால் இஸ்ரவேல் தேசத்துக்கு தலைவனாக மாறினார்.

 

3. எலியா தேவனோடு online-ல் இருந்ததால் தைரியமாக சவால் விட முடிந்தது.

 

இதே போல் இன்று வரை அநேக தேவமனிதர்களை பார்க்க முடியும். தேவபிரசன்னத்தில், அவரோடு எப்போதும் ஐக்கியத்திலிருப்போரை தேவன் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். கொடியானது செடியில் நிலைத்திராவிட்டால் தானாய் கனிகொடுக்க முடியாது. அது வாடி தீக்கிரையாக்கப்படும். அது யாருக்கும் பயன் இல்லாமல் போகும். நாமும் தேவனோடு நிலைத்திருந்தால் தான் மிகுந்த கனிகளை கொடுக்க முடியும்; தேவனால் நம்மைப் பயன்படுத்தவும் முடியும். தேவனோடு உள்ள தொடர்பு சரி இல்லை என்றால் நாமும் எதற்கும் பிரயோஜனமற்று அக்கினி நரகத்தில் தள்ளப்படுவோம்.

 

பிரியமானவர்களே! இன்று நீங்கள் சிந்தியுங்கள். தேவனோடு உங்களுக்கு உள்ள தொடர்பு offline-ல் உள்ளதா? online -ல் உள்ளதா? online-ல் இருக்கிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் உண்டு. தேவனுக்கு பயப்படும் பயம் இருக்கும். அவர் என்னை பார்த்துக் கொண்டேயிருக்கிறார் என்ற உணர்வு பாவத்தை விட்டு விலகச் செய்யும். online -ல் இருந்தால் உணர்வற்ற கடின இருதயம், நான் செய்வது சரிதானே என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். நாம் நம்மை சோதித்து சரிப்படுத்துவோம். கர்த்தர் உங்களை பயன்படுத்தி பிரயோஜனமாய் வாழவைப்பார்.

- Y. பவுல்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

500 வடமாநில மிஷனெரிகள் எழுப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al