Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.02.2024
Share:

By Village Missionary Movement

Monday, 19-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 19.02.2024

 

ஏற்றுக்கொள்ளும் தகப்பன்

 

"ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும்… சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே" - உபாகமம் 1:31

 

ஒரு கிராமத்தில் ரேகாவும் அவள் அம்மாவும் வாழ்ந்து வந்தார்கள். அங்கு 6ம் வகுப்பு படிக்க வழியில்லை. அதனால் அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். அவள் அங்கு சென்று படிக்க ஆரம்பித்ததும் அங்குள்ள நண்பர்களோடு சேர்ந்து கொண்டாள். அவளது வாழ்க்கை முறையே மாறியது. ஏழையான தன் தாயை வெறுத்தாள். மாதந்தோறும் ஹாஸ்டலுக்கு வராதே, பணத்தை யாரிடமாவது கொடுத்துவிடு என்று சொல்லி அம்மாவை புறக்கணித்து வந்தாள். லீவுக்கு கூட நண்பர் வீட்டிற்கு சென்று விடுவாள், இல்லாவிட்டால் ஹாஸ்டலிலேயே இருந்து விடுவாள். இப்படியே சென்றன வருடங்கள். 10 ம் வகுப்பு தேர்வு வந்தது. அவளுக்கோ தோல் அலர்ஜியினால் உடலில் எங்கும் அரிப்பு, புண்களாக இருந்தது. எல்லா நண்பர்களும் அவளுடன் இருப்பதை வெறுத்தனர். ஹாஸ்டலில்லிருந்து வெளியேறும்படி கூறினர். அவங்க அம்மாக்கு சொல்லி அனுப்பினர். ரேகாவோட அம்மா வர லேட்டானது, ரேகா நினைத்தாள், "அம்மா வரமாட்டாங்க; நான்தான் 7ம் வகுப்பிலிருந்தே வீட்டிற்கு போகல அதனால எங்க அம்மா என்ன மறந்திருப்பாங்க. வியாதியோடு என்னை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டாங்க" என எண்ணினாள். ஆனால் அம்மா பாசத்தோடு வந்து ரேகாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு காண்பித்து விட்டு அக்கறையோடு கவனித்தார்கள்.

 

இதேபோலத்தான் வேதத்திலும் கூட இளைய மகன் தகப்பனை விட்டு தூரம் போய் தன் பணம் செலவழிந்து பன்றியை மேய்க்கும் வேலையில் சேர்ந்து தவிடு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு சரியான உடையில்லாமல் அழுக்கடைந்தவனாக தன் தகப்பனிடம் திரும்பி வந்ததும் தகப்பன் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொள்கிறார். மகனாக ஏற்றுக் கொள்கிறார். விருந்து ஏற்பாடு செய்கிறார். அது போல்தான், நாம் என்ன தவறு செய்தாலும் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் தேவனிடம் மனம் கசந்து மன்னிப்புக் கேட்டு அவரிடம் திரும்பி வரும்போது, நம்மை ஏற்றுக் கொள்ள ஆவலோடு காத்திருக்கிறார் தேவன். அவரிடம் திரும்பும் போது நம்மை அப்படியே அரவணைத்துக் கொள்கிறார். ஆகவே இன்றே அவரிடம் திரும்புங்கள். நீங்கள் எந்த நிலைமையிலிருந்தாலும் உங்களை ஏற்றுக் கொள்ள அவர் ஆயத்தமாயிருக்கிறார். இருக்கும்படியே வாருங்கள்.  

 

இதை வாசிக்கும் அன்பரே நான் எங்கு செல்வது? என்னை ஏற்றுக் கொள்வார் யாருண்டு? எங்கு பார்த்தாலும் துன்பம் துக்கம் என்ன செய்தென்று தெரியவில்லையே என நினைக்கிறீர்களா? இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்களை தம் பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு தன் தோளில் சுமந்து காத்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் வந்து ஆசீர்வாதம் பெறுங்கள்.

- Bro. முரளி கிதியோன்

 

ஜெபக்குறிப்பு: 

தோழமை ஊழியர்களின் சபைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al