Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.02.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 14-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 14.02.2024

 

ஆழமான அன்பு 

 

"கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து," - எபேசியர் 3:18

 

கல்லூரியில் நன்றாக படிக்கும் வாலிப பெண், ஒரு பையனை நேசித்தாள். அவன் அவளிடம் ஒவ்வொரு நாளும், "நீ இல்லனா நான் செத்திடுவேன்" என்றே சொல்லுவான். இவளும் இதற்கு பயந்து திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திடீரென்று ஒருநாள் பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள். ஒரு வாரத்திலேயே அவனுடைய உண்மையான தீய குணம் வெளிப்பட்டது. அப்பொழுது அவளுக்கு ஒரே ஏமாற்றம்! இவனுடைய அன்பை நம்பி என்னுடைய எல்லாவற்றையும் விட்டு வந்தேனே என்று அழுதாள்.

 

உலக அன்பெல்லாமே இப்படித்தான்; வெளித் தோற்றத்தை வைத்து, "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றெல்லாம் சொல்லும் ஒரு ஆழமில்லாத அன்பு (Superficial Love) ! எல்லா மனிதர்களுடைய ஆசை, என்னை யாராவது நேசிப்பார்களா, விசாரிப்பார்களா? இதற்காகவே பெண்கள் தங்களை அலங்கரிப்பார்கள். ஆண்கள் ஜிம்மிற்கெல்லாம் போவார்கள். நாம் அழகாய் இருந்தால் நமக்கென்று ஒருத்தன்/ஒருத்தி வருவாங்க என்றெல்லாம் கற்பனை செய்துகொள்வார்கள். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சொல்லும் அதே நபர்தான் ஒரு நாள் "உன்னைப் பார்த்தாலே பிடிக்கல" என்று சொல்வார். இந்த அன்பெல்லாமே மாயையான அன்பு! மாறாத, உண்மையான, ஆழமான அன்பு நம் இயேசு கிறிஸ்துவின் அன்பு மாத்திரமே!

 

அந்த அன்பின் அகலம் எப்படிப்பட்ட நிறம், மதம், மொழி பேசும் மனிதனையும் தேடி மீட்டுக்கொள்ளும். அந்த அன்பின் நீளம், நீ பிறப்பதற்கு முன்பே உன்னை பெயர்சொல்லி அழைத்த அநாதி அன்பு (everlasting)! அந்த அன்பின் ஆழம், நாம் பாவ குழியில் இருக்கும்போதே நமக்காய் தன் உயிரையே கொடுத்து மீட்டு எடுத்த அன்பு! அந்த அன்பின் உயரம், குப்பையிலும் புழுதியிலும் இருந்தாலும் நம்மை உயர்த்தி வைத்து அழகு பார்க்கும் அன்பு!

 

உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில், தேவன் நம்மோடு இடைபடுகிறார். நீங்கள் திருமணம் ஆனவராய் இருந்தாலும் சரி, வாலிப பிள்ளைகளாக இருந்தாலும் சரி, நம்முடைய முதல் காதல் இயேசுவுக்கு மட்டும்தான். அதன் பின்புதான் நம் வாழ்க்கை துணை, பெற்றோர், நண்பர்கள். இந்த ஆழமான அறிவுகெட்டாத இயேசுவின் அன்பு உங்களை இந்த நாளில் நிரப்புவதாக!

- Dr. ரஞ்சிதா

 

ஜெபக்குறிப்பு: 

Child Care Child திட்டத்தில் இணைந்துள்ள சிறுபிள்ளைகள் மற்றும் அவர்களின் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al