Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.02.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 13-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 13.02.2024

 

மனப்பூர்வமாய் செய்யுங்கள்!

 

"எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்." - கொலோ.3:24

 

அன்று 1984 - ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி-இரவு. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. பணியிலிருந்த தொழிலாளி ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களை பராமரித்து வந்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது கொள்கலனில் அபாயகரமான மீத்தேல் ஐசோசயனைட் (MIC) என்ற வாயு இருப்பதை உணர்ந்தார். உடனே தனது மேலதிகாரியிடம் சென்று தெரிவித்தார். ஆனால் அந்த மேலதிகாரி அதைக் கண்டு கொள்ளவில்லை. அந்த தொழிலாளியும் தன் வேலைநேரம் முடிந்தவுடன் புறப்பட்டு சென்று விட்டார். நேரம் 12 -த் தாண்டி டிசம்பர் 3ம் தேதி ஆனது. அபாயகரமான அந்த வாயு அழுத்தம் தாங்க முடியாமல் வெளியேறி காற்றிலே கலந்து விட்டது. அப்போது போபால் மாநகரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அநேகர் சுவாசக் கோளாறை அனுபவித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாயு எங்கும் பரவி ஜனங்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். மிருக ஜீவன்கள் மரித்தன. அதன்பின்பு கணக்கெடுப்பின்படி சுமார் 20,000 பேர் மரித்தனர். சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை மூச்சுத்திணறலை அனுபவித்தனர். மிகப் பெரிய துயர சம்பவமாக "போபால் விஷ வாயு சம்பவம்" மாறியது. சில ஆண்டுகளாக அதனுடைய வீரியத்தால் ஒரு அதிகாரியின் அலட்சியம் இந்திய தேசத்திற்கே ஒரு துக்க நாளை கொண்டுவந்து விட்டது.

 

வேதத்தில் அப்.பவுல் தான் உண்டாக்கிய சபை மக்களுக்கு சொல்லும்போது, "எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்யுங்கள்" என்கிறார். ஏனென்றால் அவர் அதை கடைப்பிடித்து வாழ்ந்தார். அவர் மனிதர்களுக்கென்று கடமைக்காகவோ, பார்வைக்காகவோ எதையுமே செய்யவில்லை. தேவனுடைய ஊழியத்தை இந்தப் பூமியில் மனப்பூர்வமாய் செய்து நிறைவேற்றினார்.

 

நண்பர்களே! இன்றைக்கு நாம் எதைச் செய்கிறோம் என்பதை விட எப்படிப்பட்ட மனதுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். தேவன் உங்களை எந்த இடத்தில் இருக்கும்படி வைக்கிறாரோ அங்கு மனப்பூர்வமாய் இருங்கள். மனப்பூர்வமாய் கருத்தாய் ஜெபியுங்கள். வேதத்தை வாசித்து தியானியுங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் முடிந்த ஊழியங்களை மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். தேவன் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்ற இந்தப் பூமியில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்களிடத்தில் ஒரு மணி நேரம் இருக்கிறதா? அதில் நீங்கள் எங்களுடன் இணைந்து கைப்பிரதி ஊழியம், மருத்துவமனை ஊழியம், சிறுவர் ஊழியம் செய்ய உங்களை வரவேற்கிறோம். அதை நீங்கள் மனப்பூர்வமாய் செய்யலாம். "சிறிய காரியமோ பெரிய காரியமோ மனப்பூர்வமாய் செய்யுங்கள்"

- T. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

தங்கள் பிள்ளைகள் சார்பாக 500 ரூபாய் கொடுக்கிற ஒருலட்சம் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al