Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.02.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 10-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 10.02.2024

 

விசுவாசம் என்னும் விதை

 

"…கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்;" - மத்.17:20

 

பைபிள் காலேஜ் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு "கடுகு விதை அளவு விசுவாசம்" என்ற தலைப்பில் போதித்தார். மாணவர்கள் அனைவரும் இதை கேட்டுவிட்டு போய்விட்டார்கள். ஆனால் ராஜேஷ் மட்டும் அந்த வார்த்தையை யோசித்து கொண்டிருந்தான். ராஜேஷ் உள்ளத்தில், நம்முடைய கல்லூரிக்கு வரும் வழியில் தடையாய் இருக்கிற அந்த பெரிய பாறையை ஜெபத்தின் மூலம் அகற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தினமும் அந்த பெரிய பாறையை பார்த்து நீ பெயர்ந்து அப்புறம் போ என்று சொன்னான். இப்படியே 2 மாதம் கடந்தது ராஜேஷின் ஜெபத்தை பார்த்து சக மாணவர்கள் இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள். மூன்று மாதம் கழித்து ஒருநாள் பெரிய பெரிய இயந்திரங்களின் உதவியோடு அப்பாறை வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. விசாரித்த போது மாநில அரசின் முயற்சி தான் அது என்று தெரிய வந்தது. ராஜேஷை அழைத்த கல்லூரி முதல்வர், "உன் விசுவாசத்தை தேவன் கனப்படுத்தினார். விசுவாசம் ஒரு கடுகு விதையை போன்றது; அளவு சிறிதாக இருந்தாலும் விளைவு மலையை போன்று பெரியது" என்று பாராட்டினார்.  

 

வேதத்திலே கடுகளவு விசுவாசத்தில் மலை போன்ற அற்புதத்தை கண்ட ஒரு பெண்மணி உண்டு. அவள்தான் ராகாப். அவள் ஒரு வேசி என்று வேதம் சொல்கிறது. அவள் இஸ்ரவேலை சாராதவளாய் இருந்த போதும் அவளுக்குள் தேவனைக் குறித்த விசுவாசம் இருந்தது. தேவ ஜனங்களைப் போல் தேவனை அறிந்தவள் அல்ல. தன் பாவமான வாழ்வின் மத்தியிலும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆண்டவர் செய்த அற்புதங்களை கேள்விப்பட்டதோடு அதை விசுவாசித்தாள். விளைவு! அவள் உள்ளத்தில் இருந்த சிறிய விசுவாசம் பெரிய பலனை தந்தது 

 

இன்று உங்களுடைய உள்ளத்திலும் மிகச் சிறிய விசுவாசம் உண்டா? அந்த விசுவாசம் விதையை போன்றது. அதில் ஜீவன் உண்டு; அது பெருகும். விசுவாசம் என்னும் விதை உள்ளத்தில் இருந்தால் பெரிய பெரிய காரியங்களை செய்ய உங்களை வழிநடத்தும். ஆம், தேவன் உங்களிடம் பெரிய காரியத்தை எதிர்பார்க்கவில்லை. கடுகு விதை அளவு விசுவாசத்தைத்தான் எதிர்பார்க்கிறார். உங்களிடம் உண்டா? நீங்கள் சந்தித்திடும் பிரச்சனையை ஜெயிக்க அந்த விசுவாசமே போதும். அல்லேலுயா!

- Bro. கிறிஸ்டோபர்

 

ஜெபக்குறிப்பு: 

இன்று நடைபெறுகிற 24 மணிநேர உபவாச ஜெபத்தில் Online ல், ஆமென் வில்லேஜ் டிவியின் மூலமாய் நம்மோடு கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al