Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.02.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 07-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 07.02.2024

 

சமாரிய விதை

 

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." - நீதி. 28:13

 

கிறிஸ்தவ வாலிபன் ஒருவன் ஒரு பாவத்தில் விழுந்தான். உடனடியாக அவன் தன் உள்ளத்தில் அதைக்குறித்து உணர்த்தப்பட்டு மனஸ்தாபத்துடன் அப்பாவத்தை அறிக்கை செய்தது மட்டுமின்றி தன்னைப் பாவத்தில் விழச்செய்த காரியத்தை சரி செய்து கொண்டான். ஆனால் பிசாசு அந்த வாலிபனை குற்றப்படுத்திக் கொண்டேயிருந்தான். பல ஆண்டுகள் குற்றஉணர்வோடு அந்த வாலிபன் போராடிக் கொண்டிருந்தான். ஒருநாள் தன் சபையிலுள்ள தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒரு தாயாரை அணுகி தனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது இவனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. தன் உள்ளத்திற்குள் ஆண்டவரே, இப்படி ஒரு பாவம் செய்து விட்டேனே, என்னை மன்னித்து விட்டீரா? என்று இதே காரியத்தைத் திரும்ப திரும்ப சொல்லி உள்ளத்தில் ஜெபித்தான். ஆண்டவர் அந்த தாயார் மூலம் பேசினார். "மகனே நீ என்ன பாவம் செய்தாய்? எனக்கு ஞாபகம் இல்லையே" என்று! ஆம், மன்னித்த தேவன் அவற்றை மறந்து விட்டார். அல்லேலூயா!!

 

ஆண்டவராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் சமாரியா நாட்டின் வழியாய்ப் போக வேண்டியதாயிருந்தபடியால் இயேசுவானவர் பிரயாணத்தில் இளைப்படைந்தவராய் கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளிடம் "தாகத்துக்குத் தா" எனக் கேட்டார். ஆண்டவராகிய இயேசு அந்த ஸ்திரீயை பாவியானவளாக பார்த்து ஒதுக்கி விடவில்லை, குற்றப்படுத்தவில்லை. அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். உடனே அந்த ஸ்திரீ தண்ணீர் மொள்ள கொண்டுவந்த தன் குடத்தை வைத்து விட்டு நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள் என சுவிசேஷத்தை அறிவித்தாள். இந்த ஸ்திரீ மூலமாக முழு கிராமமே இயேசுவை அறிந்து கொண்டது.

 

எனக்கு அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவர் மாத்திரமல்ல, தாம் மன்னித்த பாவங்களை அறவே மறந்தும் விடுகிறவர். எனவே நம்முடைய பாவங்கள் குறித்து நமக்கு குற்ற உணர்வு ஏற்படுமாயின் அதனை இயேசுவிடம் அறிக்கை செய்து விட்டு விடுவோம். சமாரியா ஸ்திரீ நமக்கு கற்றுக் கொடுக்கிற பாடம் இதுவே! இன்றும் என்னால் என்ன செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இயேசு உங்கள் வாழ்வில் செய்த நன்மைகளை சாட்சியாக பகிருங்கள். இதுவே சுவிசேஷம்! கடல், மலை கடந்து சென்றுதான் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் வசிக்கின்ற பகுதிகளில் அவருக்காக விதையாக மாறுவீர்கள் என்றால் நிச்சயம் பிரமிக்கத்தக்க பலன் உண்டாகும்.

- Mrs. ரூபி அருண்

 

ஜெபக்குறிப்பு:

எல்லா தாலுக்காக்களிலும் 3 ஒருமணிநேர மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet