By Village Missionary Movement
Sunday, 04-Feb-2024இன்றைய தியானம்(Tamil) 04.02.2024
SHOW CASE
"…நீர் என்னைக் காண்கிற தேவன்…" - ஆதியாகமம் 16:13
ஹலோ அன்பு செல்லங்களே! எப்படி இருக்கீங்க? இந்த புதிய வருடத்தில் புது வளர்ச்சி என்னன்னா அடுத்த வகுப்புக்கு போகப் போறீங்க, இல்லையா? இந்த வருடம் முழுவதும் இயேசப்பா உங்க கூட இருக்கணும்னா நீங்க நல்ல பிள்ளைகளா வாழ்ந்து காட்டணும், ஓகே!. நீங்க தவறு செய்யும் போது பெற்றோர் கண்டித்தால் கோபப்படாம திருத்திக் கொள்ளணும், சரிதானே குட்டீஸ்! சரி, கதை கேட்போமா?
உங்க வீட்டில் Self -ஐ அழகுபடுத்த சில அலங்கார பொருட்கள் வாங்கி வைப்பீங்கதானே! இதேபோல் பணக்கார மனிதர் ஒருவர் தனது வீட்டை அழகுபடுத்த எங்கேயும் இல்லாத அழகான சிற்பம் ஒன்றை செய்து வைக்க நினைத்தார். சொன்ன வேலையை கச்சிதமாய் முடிக்கும் சிற்பி ஒருவரை கண்டு பிடித்து தன் ஆசையை சொன்னார் பணக்காரர். விலையுயர்ந்த கல்லாக இருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொன்னதும் சரி என்று சொன்ன சிற்பி தன் வேலையை ஆரம்பித்தார். சில நாட்கள் சென்ற பின்பு பணக்காரர் சிற்பியை பார்க்கச் சென்றார். பளபளப்பாய் கண்ணைக் கவரக்கூடிய சிற்பம் ஒன்றை செய்து முடித்திருந்தார். பின்பக்கம் கொஞ்சம் அழகாய் செதுக்கி அழகுபடுத்திக் கொண்டிருந்தார். எதுக்கு பின்பக்கத்துக்கு இவ்வளவு முயற்சி எடுக்குறீங்க முன்னாடிதானே எல்லாரும் பார்ப்பாங்க. அதுதான் ரொம்ப அழகா இருக்குதே என்று பணக்காரர் சொன்னார்.
அதற்கு சிற்பி ஐயா நான் இயேசப்பாவோட பிள்ளை. அவருக்கு எல்லாமே தெரியும். முன்பக்கம், பின்பக்கம் ஏன்? என் மனதில் இருப்பதும் அவருக்குத் தெரியும். நான் உண்மையா என் வேலையை செய்கிறேனா என்று என் இயேசு சாமி பார்க்கிறாரே! இதனால் என் வேலையை முழுமையாய் செய்து முடித்தால் தான் எனக்கு சந்தோஷம் ஐயா என்று சொன்னதும் பணக்காரருக்கு ரொம்ப ஆச்சரியம். அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தைவிட அதிகமாய் கொடுத்து நிறைய பரிசு பொருட்களையும் கொடுத்து அவரை கனப்படுத்தினார். இயேசு என்னையும் பார்த்துக் கொண்டே இருக்கிறாரா? என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்ற அவருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் உண்டானது. சிற்பம் மூலமாக இயேசு என்னையும் பார்க்கிறார் என்ற எண்ணம் அந்த பணக்காரருக்கு வந்தது. அன்றுமுதல் அவர் வாழ்க்கையிலும் எதை செய்தாலும் உண்மையாய் இருக்க நினைத்து இயேசு கிறிஸ்துவை அவர் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டார்.
அருமையான செல்லங்களே! நீங்க செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் தேவன் பார்க்கின்றார் என்ற எண்ணம் எப்பொழுதும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எங்கும் தவறு செய்ய மாட்டீங்க. உமக்கு பயப்படும் பயத்தை தாங்கண்னு கேட்பீங்களா? சூப்பர் வெரிகுட்!!
- Mrs. தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864