Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.02.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 03-Feb-2024

இன்றைய தியானம்(Tamil) 03.02.2024

 

புறப்பட்டுப் போங்கள்

 

"…நீங்கள் புறப்பட்டுப்போய், சகலஜாதிகளையும் சீஷராக்கி,…" - மத்தேயு 28:19

 

ஒரு வாலிபன் தன் வீட்டின் அருகிலுள்ள பெரிய பணக்கார நபர் ஒருவருக்காக தொடாந்து ஜெபித்து வந்தான். ஏனெனில் அந்த நபர் பலருக்கு உதவிகள் செய்து நல்லவராக இருந்தார். ஆனால் கர்த்தரை அறியாமல் உள்ளாரே என பாரத்தோடு அந்த வாலிபன் தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒருநாள் ஆண்டவர் அவனிடத்தில் "போ பேசு" என்றார். ஆனால் அந்த வாலிபனோ நான் மிகவும் வயதில் சிறியவன் அதுவும் பரம ஏழை, நான் எப்படி அவரிடம் பேச முடியும் என யோசித்துக் கொண்டே இருந்தான். "அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? (ரோமர் 10:14) என்ற வசனத்தைக் கொண்டு தேவன் பேசினார். அவன் இன்று முழுவதும் ஜெபித்துவிட்டுப் போகிறேன் என்றான். அன்று இரவு திடீரென்று அவரோடு இணைந்து வியாபாரம் பார்த்த பார்ட்னருக்கு நடந்த பிரச்சனையில் பார்ட்னர் பணக்காரனை கொன்று விட்டார். காலை எழுந்ததும் வாலிபன் தன் வீட்டின் முன் கூட்டம் என்னவென்று கேட்டு, செய்தியறிந்து அழுதான்.

 

இயேசு கிறிஸ்து நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் என மத்தேயு 28:19-20 ல் கூறுகிறார். நாமோ அந்த வாலிபனைப் போல பல சாக்குபோக்குகளை சொல்கிறோமா? பெரிய படைத்தளபதி நாகமான் கர்த்தரை அறிய, தேவன் அடிமையான சிறு பெண்ணைத் தெரிந்து கொண்டார். நாகமான் சுகம் பெற்றதன் மூலம் சீரிய தேசம் முழுவதும் தேவனை ருசிக்க முடிந்தது. தாய், தகப்பன் இல்லாமல் தன் அண்ணனோடு புறதேசத்தில் வாழ்ந்த எஸ்தரைக் கொண்டு தான் யூதகுலத்திற்கு இரட்சிப்பைத் தேவன் கட்டளையிட்டார். இயேசு கிறிஸ்து தன்னை பின்பற்ற தன்னோடிருந்த படிக்காத மீனவர்களைத் தெரிந்து கொண்டார். மூன்று முறை மறுதலித்த பேதுருவைக் கொண்டு சபையைக் கட்டினார். அவர் மூலம் ஐந்தாயிரம் பேர் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டனர். மேலும் அவரது நிழல் பட்டோர் பலர் சுகம் பெற்றனர். திக்குவாயும், மந்த நாவுமுள்ள மோசேயைக் கொண்டு இலட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை மீட்கத் திருவுளம் கொண்டார்.

 

மோசே, எஸ்தர், சிறுபெண், பேதுருவை பயன்படுத்திய தேவன் உங்களையும் பயன்படுத்துவார். நீங்கள் தேவனிடத்தில் அர்ப்பணித்து புறப்பட்டு போங்கள். என்ன பேசுவோம் என்று கலங்க வேண்டாம். ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் என மத்தேயு 10:20 கூறுகிறது. அவருக்காக ஒரு அடி எடுத்து வைக்கும் போது அவரே நமக்குள்ளிருந்து மகிமைப்படுவார். இதனை ருசி பார்க்க, இன்றே சுவிசேஷம் அறிவிக்க புறப்படுங்கள்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

313 தாலுகாக்களிலும் இரண்டிரண்டு தெபொராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet