By Village Missionary Movement
Sunday, 28-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 28.01.2024 (Kids Special)
தேவையானதை தருவார்
"...உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" - மத்தேயு 6:8
ஹலோ குட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா? இன்னைக்கு ஒரு கதை கேட்கலாமா? ஒரு ஊரில் நிலா என்ற ஒரு குட்டிப் பிள்ளை இருந்தாள். பெற்றோருக்கு அவள் செல்லக் குழந்தை! கேட்டதையெல்லாம் வாங்கி தருவார்கள். இல்லாவிட்டால் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் அழ ஆரம்பித்து விடுவாள். வாங்கிக் கொடுத்த பல பொருட்களை நினைத்து சந்தோஷப்படாமல், வாங்கித் தராத ஒரேயொரு பொருளைக் கேட்டுக் கேட்டு வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பாள். பெற்றோர் அவளிடம் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவள் மனம் மாறவேயில்லை.
ஒருநாள் தன் பெற்றோருடன் Super market சென்றாள் நிலா. அங்கு ஒரு விலையுயர்ந்த chocolate-ஐ காண்பித்து தனக்கு இது வேண்டுமென்று அடம் பிடிக்க தொடங்கினாள். அவள் தகப்பனார், "இது மிகவும் சிறிய சாக்லேட், விலையும் அதிகம். எனவே நீ வேறு ஏதாவது கேள், நான் வாங்கி தருகிறேன்" என்றார். நிலாவோ, "இல்லை, இல்லை எனக்கு இந்த சாக்லேட்தான் வேண்டும்" என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள். அன்று கடும் டென்ஷனில் இருந்த தந்தை, அதை வாங்கி தராமல், அனைவரும் வீடு திரும்பினர். சோகத்துடன் உறங்கச் சென்றாள் நிலா.
மறுநாள் மாலை வேளையில், நிலா விளையாடிக் கொண்டிருந்த சமயம், அவளது தகப்பனார் அவளுக்கு ஒரு புது மிதிவண்டியை வாங்கித் வந்தார். அதைக் கண்ட நிலா மிகவும் சந்தோஷம் அடைந்தாள். மிதிவண்டியில் ஏறி அமர்ந்து, வீட்டை சுற்றி வந்தாள் அப்பொழுது நேற்று ஒரு சாக்லேட்டிற்காக அடம்பிடித்தது அவள் நினைவுக்கு வந்தது. அந்த choco;ate-ஐ வாங்கி இருந்தால், அதை சாப்பிடும் வரை மட்டுமே மகிழ்ச்சி இருந்திருக்கும் ஆனால், இந்த மிதிவண்டியில் நான் round அடித்து தினம் தினம் மகிழ முடியும் என்பதை உணர்ந்தாள். தன் பெற்றோரிடமும் தன் தவற்றை ஒப்புக் கொண்டு, இனி அடம்பிடிக்காமல் நல்ல பிள்ளையாக வாழ்வதாக உறுதியளித்தாள்.
என்ன குட்டீஸ், உங்களுக்கு இன்னது தேவை என்று நம் இயேசப்பாவுக்கும், உங்க பெற்றோருக்கும் நல்லாவே தெரியும். so இதுதான் வேண்டும் என்று எப்பவும் அடம்பிடிக்காதீங்க. உங்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் உங்கள் பெற்றோர் மூலமா இயேசப்பா தருவாங்க ok வா!
- Mrs. ஐடா கிங்டேவிட்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864