Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27.01.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 27-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 27.01.2024

 

அனல்மூட்டும் ஆவியானவர்

 

"…தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்..." - எபிரெயர் 1:7

 

பல ஆண்டுகளாக மூடப்பட்டுக்கிடந்த தொழிற்சாலை ஒன்றை ஒருவர் வாங்கி முற்றிலும் புதிய ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அங்குள்ள இயந்திரங்களை இயக்க முயற்சி செய்தனர். ஒன்றும் ஓடவில்லை. சக்கரங்களை கழற்றிப்பார்த்தார்கள். கைப்பிடிகளை இயக்கிப் பார்த்தார்கள். உருளைகளுக்கு எண்ணெய் போட்டுப்பார்த்தனர். ஆனாலும் ஒன்றும் நகரவில்லை. கடைசியில் சில பணியாளர்கள் கொதிகல அறைக்குள் போய் திறந்து பார்த்தபோது, அங்கே நெருப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டார்கள். உடனே உலை மூடியைத் திறந்து விறகுகளையும் கரிகளையும் போட்டு அக்கினியைப் பற்றவைத்தார்கள். விரைவில் நீராவி உண்டாகி பிஸ்டன்களிலும் சிலிண்டர்களிலும் பாய்ந்து ஏறக்குறைய ஒன்றிரண்டு மணி நேரத்திற்குள்ளாக அந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துவிட்டது.

 

அன்று 120 பேர் கூடியிருந்த மேல் வீட்டறையில் பலத்த காற்று அடித்து அக்கினி மயமான நாவுகளாக பரிசுத்த ஆவியானவர் இறங்கி அவர்களை நிரப்பினார். ஆவியானவரால் நிரப்பப்பட்ட அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக எழும்பினார்கள். அவரை மறுதலித்த பேதுருவும் ஆவியானவரால் நிரப்பப்பட்டவுடன் தைரியமாய் பிரசங்கித்தார். ஜனங்கள் அவரது தைரியத்தைக் கண்டு வியந்தனர். பிரசங்கத்தைக் கேட்டு மூவாயிரம் பேர், ஐயாயிரம்பேர் என கூட்டங்கூட்டமாய் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். இது எப்படியாயிற்று? தேவ ஆவியினாலே ஆயிற்று. ஆம், அவர்களுக்குள்ளாக ஆவியானவரின் அபிஷேகம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.

 

ஆனால் இன்று அநேக சபைகளில் அக்கினி அணைந்து போய் கிடக்கிறது. இதைவிட வருத்தமான, பரிதாபமான காரியம் வேறொன்றுமில்லை. ஆகவேதான் எந்த அசைவையும் முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. அநேக ஆலயங்களில் நல்ல பாடகற்குழுக்கள் உண்டு, அருமையாய் இசை மீட்டுபவர்கள் இருக்கிறார்கள், திறமையான பிரசங்கிமார்களும் உண்டு, அப்படியிருந்தும் எழுப்புதல் இல்லாதிருப்பதற்கு காரணமென்ன? அங்கு அக்கினி இல்லை. பரிசுத்த ஆவியின் அக்கினி இருக்குமென்றால் நிச்சயமாகவே அங்கு எழுப்புதல் உண்டாகும், உயிர் மீட்சி வந்துவிடும். பெரிய ஆத்தும அறுவடையைக் காணலாம்.

 

அபிஷேகம் பெற்றவர்களே, எழும்புங்கள்! உங்கள் அக்கினி மற்றவர்களை உயிரடையச்செய்யட்டும். நாம் சபையாய் இணைந்து திறப்பிலே நிற்போம். புதிய ஆத்துமாக்களை அனுதினமும் சபையிலே சேர்ப்போம். ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாவோம். மாரநாதா!

- T. சாமுவேல்

 

ஜெபக்குறிப்பு

நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் பங்குபெறும் நபர்கள் பூரண சுகம் பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al