Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.01.2024
Share:

By Village Missionary Movement

Monday, 22-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 22.01.2024

 

கண்ணீரோடே விதையுங்கள்

 

"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" - சங்கீதம் 126:5

 

சீன மூங்கில் என்னும் ஒருவகை மூங்கிலை பயிரிட்டான் ஒருவன். விதைத்தது முதல் அதற்கு தவறாது தண்ணீர் பாய்ச்சியும், பராமரித்தும் வந்தான். எவ்வளவு தண்ணீர் பாய்ச்சியும் விதைத்த மூங்கில் முளைத்த பாடில்லை. நாட்கள் சென்றன, மாதங்கள் கடந்தன; ஏன் வருடங்களும் உருண்டோடின. அவன் நிலத்தை சுற்றிலும் மற்ற பயிர்களை விளைவித்தவர்கள் அதன் பலனை அடைந்து மகிழ்ந்திருந்தனர். இவனோ சுற்றியிருந்தவர்களின் ஏளனத்திற்கும் பரிகாசத்திற்கும் உள்ளானான். நான்கு வருட காத்திருப்பிற்குப் பின் அவன் நிலத்தில் மூங்கில்கள் முளைத்தெழும்பின. அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. கிட்டத்தட்ட ஆறு வாரங்களில் சுமார் 90 அடி அளவிற்கு பிரம்மாண்டமாய் வளர்ந்தது. பார்ப்பவர்கள் யாவரையும் பிரமிக்க வைத்தது. " அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்: ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். (சங்கீதம் 126:6) என்ற வார்த்தை எத்தனை உண்மையானது!

 

வேதத்தில் அன்னாள் என்ற பெண்மணியை நாம் பார்க்கிறோம். அன்னாளுக்கு குழந்தை இல்லை, இதினிமித்தம் அவளுடைய சக்களத்தி அவளை மனமடிவாக்குவாள். அன்னாள் ஆலயத்தில் சென்று தன் இருதயத்தில் உள்ள கவலையை தேவனிடம் கொட்டுகிறாள். தேவனும் அன்னாளின் வேண்டுதலுக்கு செவிகொடுத்து ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தார். பல வருட கண்ணீரின் ஜெபம் அற்புதத்தைக் கொண்டு வந்தது. பலன், பல வித ஊழியத்தை செய்யும் சாமுவேல் பிறந்தார். இஸ்ரவேலில் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியைக் கொடுத்தாள். (1சாமுவேல் 3:20) இஸ்ரவேலில் ராஜாக்களான சவுல் மற்றும் தாவீதை அபிஷேகம் பண்ணினவர் சாமுவேல் தீர்க்கதரிசிதான். அவர் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதியாகவும் இருந்தார். இப்படி அபிஷேகிக்கப்பட்ட ஒரு சாமுவேல் அன்னாளின் கண்ணீரின் ஜெபத்தில் கிடைத்தார்.

 

எனக்கன்பானவர்களே, சீன மூங்கில் கற்றுக் கொடுப்பதும், அன்னாளுடைய வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதும் ஒன்றுதான். "தேவனுடைய சமூகத்தில் காத்திரு" என்று. நிந்தனை, அவமானங்களில் கண்ணீருடன் உங்கள் விண்ணப்பங்களை விதையுங்கள். அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா தாமே வெளியரங்கமாய் பலனளிப்பார். நீங்கள் செய்த எல்லா நன்மைகளுக்குமான பலனை இப்புதிய ஆண்டில் நிறைவாய் பெற்றுக் கொள்வீர்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

- Mrs. திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு:

நமது வட இந்திய பணித்தள ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet jojobet holiganbet bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş