Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.01.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 21.01.2024 (Kids Special)

 

POWER OF PRAYER

 

"என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;" - சங்கீதம் 2:8 

  

இங்கிலாந்து தேசத்தில் அண்ணன், தங்கை இரண்டு பேர் வாழ்ந்து வந்தாங்க. அண்ணன் ஹட்சன், தங்கை அமலியாவை விட 4 வயது மூத்தவன். நல்லா ஜெபிக்க, பைபிள் வாசிக்க, சண்டே கிளாஸில் கலந்து கொள்ள என பக்தியாக வாழ்ந்து வந்தாங்க. ஹட்சன் வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்து பெரியவனான போது Bank-ல் வேலை கிடைச்சது. வெளியூரில் போய் தங்கி வேலை பார்த்தாங்க. நல்ல வேலை, நல்ல சம்பளம், கையில எப்பவுமே பணம் இருந்து கொண்டே இருந்தது. 

 

நம்ம கைல பணம் இருந்தா நமக்கு எது பிடிக்குதோ அதை உடனே வாங்கி கொள்வோம் அப்படித்தானே இந்த ஹட்சனும் தனியா இருந்ததுனால தன்னுடைய விருப்பத்திற்கு வாழ ஆரம்பித்தான். கர்த்தரை தேட மனசு வரல கொஞ்சம் கொஞ்சமாக கர்த்தரை விட்டு பின் வாங்கினான்.

  

அதிகமான வேலை, தேவையில்லாத கெட்ட பழக்கவழக்கங்களால் உடம்பும் சரியில்லாமல் போனது. உடல் சரியில்லாமல் எப்படி தனியா இருக்க முடியும்? உடனே தன் வீட்டிற்கு திரும்பி வந்தான். தனது தங்கையான அமலியாவிடம், "தேவன் இருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியல, குழப்பமாக இருக்கு வேதத்தை வாசிக்கிறதை விட்டுவிட்டேன்" என கூறினான். இதை அமலியா கேட்டு ரொம்பவே கவலைப்பட்டாள். உடனே அவள் தனியே தன்னுடைய Room -ல போய் தன்னுடைய அண்ணனுக்காக ஜெபித்தாள். இயேசப்பா எங்க அண்ணன் உங்க அன்பை மறுபடியும் அறிந்து கொள்ளனும் என்று தினமும் ஜெபித்தாள்.

  

அற்புத விதமாக ஹட்சன் மறுபடியும் தேவ அன்பை அறிந்து கொண்டான். இந்த அன்புள்ள தெய்வத்தை அனைவருக்கும் சொல்லணும் என்று முடிவு எடுத்தான். சீன தேசத்திற்கு மிஷனெரியாக போக அர்ப்பணித்து சென்றான். இவனைக் கொண்டு சீன தேசத்தில் தேவன் அநேகரை தம்முடைய பிள்ளைகளாக மாற்றினார்.  

 

என்ன குட்டீஸ்! ஹட்சன் அண்ணனுக்கு அமலியா ஜெபித்தது போல உங்க கூட இருக்கிற நண்பர்களுக்காக, உடன்பிறந்தவர்களுக்காக நீங்க ஜெபிக்கும்போது இயேசப்பா கேட்டு கண்டிப்பாக பதில் தருவாங்க. இப்பவே ஜெபிக்க ஆரம்பிங்க, Ready தானே!

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş