Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.01.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 20-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 20.01.2024

 

தேவனுடைய ராஜ்யம்

 

"சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்;…" - ஏசாயா 60:22

 

மனிதகுலம் தெய்வீக உண்மைகளைப் பற்றி சுலபமாக புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இயேசுகிறிஸ்து பல உவமைகளை கூறினார். ஒருமுறை கடுகுவிதையை பரலோக ராஜ்யத்திற்கு ஒப்பிட்டுக் கூறினார். கடுகு சகல விதைகளிலும் சிறிதாயிருந்தாலும் வளரும் போது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் தங்கி அடையத்தக்க மரமாகும் என்றார். ஆம், கடுகுவிதையைப் போன்றுதான் தேவராஜ்யமும், தேவனுடைய பிள்ளைகளும் உலகத்தின் பார்வையில் அற்பமாய்க் காணப்படுகின்றனர். ஆனாலும் எப்படி இந்த சிறிய கடுகு விதை வளர்ந்து செடியாகி பின்பு மரமாகிறதோ அப்படியே தேவ ராஜ்யமும் வளரக் கூடியது. அதுமாத்திரமல்ல அது அநேகருக்கு அடைக்கலம் தருகிறதாய் இருக்கிறது.

 

அன்பானவர்களே! இன்று நாம் வாழும் உலகத்தையும் அதின் ராஜ்யத்தையும் பாருங்கள். ஊழல், பாலியல் துன்புறுத்தல்கள், பயங்கரவாதம், பூகம்பம், வெள்ளம், தொற்று நோய்கள், போர்கள் என்று பயங்கரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மத்தியிலும் ஆண்டவர் தேவபிள்ளைகளாகிய நம்மை கடுகுவிதையைப் போல் வைத்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் விளைவைக் காணச் செய்கிறார்.

 

இதை வாசித்துக் கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளே! மனிதர்களின் பார்வையிலே நீங்கள் சிறியவர்களாக காணப்படலாம். உங்கள் பணி அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் பாருங்கள், இராட்சதனாகிய கோலியாத்தை வீழ்த்த சிறிய தாவீதையே தேவன் உபயோகப்படுத்தினார். அதைப்போல, நம்மையும் பயன்படுத்துவார். நம்மைக் கொண்டுதான் பெரிய காரியங்களை செய்வார். எனவே, சோர்வையும், கலக்கங்களையும், பயத்தையும் விட்டுவிட்டு துணிச்சலுடன் தேவராஜ்யத்தின் பணியை செய்வோம். தேவராஜ்யம் வளர்ந்து பெருகி கொண்டேயிருக்கும். பன்னிரண்டு சீஷர்களோடு ஆரம்பிக்கப்பட்ட பணி கடந்த இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் கடைசிபரியந்தம் பரவி பெரியதொரு ராஜ்யமாக உருவாகியுள்ளது. ஆம், சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான் என்ற வாக்கு எவ்வளவாய் நிறைவேறி வருகிறது! கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது. அல்லேலூயா!!

- Sis. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

திருச்சியில் கட்டப்பட்டுவரும் எழுப்புதல் ஜெபமையம் கட்டிடப் பணிகளின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş