By Village Missionary Movement
Friday, 19-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 19.01.2024
ஆசிரமம்
"…அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" - அப். 10:38
பிறரிடம் எந்த பலனையும் எதிர்பாராமல் உதவி செய்வது என்பது தலைசிறந்த நற்செயலாகும். வேதாகமத்தில் "நற்கிரியைகளைச் செய்ய நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" என்று பவுல் எழுதுகிறார். தேவையுள்ளவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்வது தெய்வீக சுபாவம் ஆகும்.
அல்பேனியா நாட்டில் சிறு கிராமத்தில் பிறந்த அன்னை தெரசா அவர்கள் 1929 டிசம்பர் ஆறாம் தேதி இந்தியா வந்தார். பாகிஸ்தான் பிரிவினை காரணமாக கண்ணெதிரே கொலை, கற்பழிப்பு, வன்முறை தலைவிரித்தாடுவதை கண்டு அவர் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. கன்னியாஸ்திரி மடத்தில் தங்கினார். முதலில் வறுமையிலும், நோயிலும் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுபிடித்து தேவைகளை நிவர்த்தி செய்தார். தொழுநோயாளிகளை தூக்கிச் சுமந்து மருத்துவம் பார்த்தார். ஒரு கோயிலுக்கு அருகில் சேரி தெருவில் அவரது மடம் இயங்கியது. ஒரு கோயில் பூசாரி அவரை கொலை செய்யத் துணிந்தார். பின்பு அவரே தெரசாவின் சீடனாக மாறினார். ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து தன் கையினால் சுத்தம் செய்தார். மக்கள் தொண்டே பரம பிதாவின் தொண்டு என்று கண்டார். உலகமெங்கும் இருந்து விருதுகள் குவிந்தன. அனைத்தையும் ஏழை பிள்ளைகளுக்கு செலவிட்டார். 1979- இல் உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. தெரசா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தொண்டு செய்வதையே லட்சியமாகக் கொண்டு தன் ஓட்டத்தை முடித்தார்.
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தனது ஊழிய நாட்கள் முழுவதும் சுவிசேஷத்தை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் தேவையுள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார் என்பதை வேதாகமத்தில் வாசிக்கின்றோம். இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று சொன்ன இயேசுவானவர் தனது ஊழிய நாட்களிலும் அதை அப்படியே செய்து காண்பித்தார். பரி.லூக்கா இதை குறிப்பிடும் பொழுது "நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார்" என இயேசுவைப் பற்றி எழுதுகிறார்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! பிறருக்கு நன்மை செய்வது என்பது ஒரு விதையைப் போன்றது. நாம் நன்மை செய்யும்படியாக தேவனால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். "நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள், இப்படிப்பட்ட பலிகள் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார்" என்று அருமையாக எபிரேய நிருப ஆக்கியோன் நமக்கு எழுதுகிறார். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக, நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். நன்மைகளை விதையுங்கள், நன்மைகளை பலனாக பெறுவீர்கள்.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்களின் பணித்தள ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864