By Village Missionary Movement
Sunday, 04-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 04-04-2021 (Kids Special)
ஜெயித்தெழுந்தார்
“...மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது...” – 1கொரிந்தியர் 15:54
கூக்கூ....ஜிக்குபுக்கு....ஜிக்குபுக்கு....கூக்கூ என்று சத்தம் கேட்டதும் Train-ஐ பார்க்க வேண்டுமென்று ஆசை வரும் தானே! Train-ல ஊருக்கு போகணும்னா ரொம்ப ஜாலியா இருக்குமே. இப்படித்தான் Train-ல போறதையும், வர்றதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஒரு ஆடு மேய்க்கின்ற தம்பி. Train ஓட்டுநரும் அவனை பார்த்து சிரிப்பார். இவனும் பதிலுக்கு டா...டா... bye சொல்லுவான். இது இவனுக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது. இப்படியே தினமும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வார்கள். ஆடு மேய்த்துக் கொண்டே Train வருகைக்காக காத்துக் கொண்டேயிருப்பான். ஒரு நாள் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் வந்து ரயில் தண்டவாளத்தை மோதியடித்தது. Train தண்டவாளம் உடைந்ததைக் கண்ட சிறுவன் அங்குமிங்கும் ஓடினான், என்ன செய்வதென்றே தெரியவில்லை. Train ஐ எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டே தண்டவாளத்தின் முன்னாடி நடக்க ஆரம்பித்தான். Train சத்தம் கேட்டதும் இன்னும் முன்நோக்கி ஓடினான், இரண்டு கைகளையும் அசைத்து பார்த்தான். அந்த டிரைவர்க்கு ஒன்றும் புரியவில்லை. எப்பொழுதும் வெளியே நின்றுதானே டா டா சொல்லுவான் தண்டவாளத்தில் நிற்கிறானே என்று நினைத்து Train ஐ நிறுத்த முயற்சி செய்தார், முடியவில்லை சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. சிறுவன் தண்டவாளத்தில் உடல் சிதறப்பட்டவனாய் கிடந்தான். ஏன் இந்த சிறுவன் மரித்தான் என்று ஒருவருக்கும் தெரியாது. சிறிது தூரம் நடந்து சென்று பார்த்தால் தண்டவாளம் உடைந்து போய் கிடந்ததை பார்த்த அனைவரின் உள்ளமும் உடைந்து போனது. Train -இல் பயணித்த அனைவரின் உயிரையும் காப்பாற்ற அந்த சிறுவன் செய்த செயலை நினைக்கும் போது, எல்லாருடைய கண்களும் குளமாயின.
இந்த உலகத்திலே பயணித்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய பயணமும் சுகமாய் இருக்க வேண்டுமென்பதற்காக, இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டார். நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்தார். ஆனாலும் ஒரு சந்தோஷமான செய்தி இயேசு உயிரோடு எழுந்தார். அவருடைய கல்லறை இன்றைக்கும் திறக்கப்பட்டுத்தான் இருக்கிறது. ஒரு நண்பன் தன் நண்பனுக்காய் உயிரைக் கொடுக்கலாம். ஆனால் உயிரோடு எழ முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவரே உயிரோடு எழுந்தார் மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்.
அன்பான குட்டி தம்பி, தங்கச்சி, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நாளைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மரணம், பாதாளம், பிசாசு யாவற்றையும் இயேசு கிறிஸ்து ஜெயித்து விட்டார். நீயும் ஜெயமுள்ள இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொள். வெற்றியுள்ள வாழ்க்கை வாழ உனக்கு உதவி செய்வார். அல்லேலூயா.
- Mrs. ஜீவா விஜய்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250