Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.01.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 17-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 17.01.2024

 

விசுவாசி ஒரு விதை 

 

"…கோதுமை மணியானது நிலத்தில் விழுந்துசாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" - யோவான்12:24

 

கிறிஸ்தவ சரித்திரத்தில் விதவிதமான விதைகள் உண்டு.

 

1) ஆதி முற்பிதாக்கள் என்னும் விதைகள்: வேதாகமத்தில் ஆபிரகாம் விசுவாசிகளின் தந்தை என அழைக்கப்படார். ஆபிரகாம் என்னும் விதையிலிருந்து பலகோடி பலன்கள் உண்டாயிருக்கிறது.

 

2) ஆதி அப்போஸ்தலர்கள் என்னும் விதைகள்: ஆதி அப்போஸ்தலர்கள் விதையாக தங்களை ஒப்புக் கொடுத்ததின் விளைவாக பல கோடி மக்கள் இன்று உலகில் விசுவாசிகளாக உள்ளனர்.

 

3) ஆதி மிஷனெரிகள் என்னும் விதைகள்: நாடு விட்டு நாடு கடந்து வந்த ஆயிரக்கணக்கான மிஷனெரிகள் விதையாக செயல்பட்டதால், பல கோடி படிப்பறிவற்றோர், நாகரீகமற்றோர், ஆதிவாசிகள் விசுவாச விதைகளாக உலகமெங்கும் இருக்கிறார்கள்.

 

இப்படி பலகோடி விதைகள் தொடர்ந்து பலன் தந்து கொண்டிருக்கிறதை அறிகிறோம். இன்னொரு புறம் இந்த விதைகள் அழிந்து விருகின்றது. காரணம் ஆதியில் நாம் பார்த்த மூன்று விதைகள் பட்ட பாடுகள், தியாகங்கள், செயல்பாடுகள் இல்லாததால் விதைகள் அழிகின்றது, போலியாகின்றது, பலன் இல்லாமல் போய்விடுகிறது.

 

வடஅமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் அந்த பறவைகளைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்த பறவை இனம் பெருகியது. கணக்கில் அடங்காத அளவுக்கு அது பெருகவே அதை சுதந்திரமாக பறக்கவிட முடிவு செய்தது. அதை பாதுகாப்பான இடத்திலிருந்து பறக்க விட்டனர். காலப்போக்கில் மறுபடியும் அந்த பறவை இனம் அழிந்து கொண்டிருப்பதை அறிந்து, மறுபடியும் அதை பராமரிக்க தங்கள் இடத்திற்கு கொண்டு வந்தனர். இப்பொழுது அதற்கு மிகப்பெரிய பயிற்சி அளிக்கப்பட்டது. தானாக இரை தேடுவது எப்படி? கூடுகளை அமைப்பது எப்படி? தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவது எப்படி? குஞ்சுகளை அவைகள் பாதுகாப்பது எப்படி? என்று பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. மீண்டும் சுதந்திரமாக அனுப்பப்பட்ட போது, அந்த பறவை இனம் பெருகத் தொடங்கியது என வட அமெரிக்காவின் பறவைகள் பாதுகாப்பபு சரணாலய சரித்திரம் கூறுகிறது.

 

இதேபோல் அநேக திருச்சபைகள் தங்கள் விசுவாசிகளை பிடி குஞ்சுகளாக, விசுவாசத்தில் குழந்தைகளாக வைத்துக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பதாக கருதி அழித்து வருகிறார்கள். இந்த பரந்த உலகில் விசுவாசிகள் என்னும் கூட்டத்தைப் பெருக்க அவர்கள் பாடுகள் மத்தியில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விசுவாசிகளையும் விசுவாச போராட்டத்தில் களம் இறங்க வேண்டும். அப்போது அது மிகப்பெரிய விசுவாச கூட்டத்தை உருவாக்க விதையாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை

- D. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நமது மீடியா ஊழியங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al