Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.01.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 14-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 14.01.2024 (Kids Special)

 

அன்பே மேலானது

 

"…இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்" - மத்தேயு 1:23

 

அன்பு செல்ல குட்டிகளே! எப்படி இருக்கீங்க? புது வருஷத்துக்குள்ள வந்தாச்சு. புதிய வருடத்தை காணச் செய்த இயேசப்பாவுக்கு நன்றி சொல்லுவோமா? 

 

ஒரு கிராமத்தில் ஒரு அழகான ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்து பக்கத்துல ஒரு குடிசை வீடு இருந்தது. அந்த வீட்டில் உள்ள அம்மா வேலை பார்த்துக் கொண்டே இருந்தாங்க. ஆலமரத்து நிழலில் மூன்று வயதானவங்க உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தாங்க. ரொம்ப நேரமா இருக்காங்களே... சாப்பிட கூப்பிடுவோம்னு நினைத்து, அந்த அம்மா போய் கூப்பிட்டாங்க. கிராமத்துல யார் வந்தாலும் உபசரிப்பாங்க, அன்போடு கவனிப்பாங்க. இதனால் சில நேரம் தேவதூதர்களை கூட உபசரிப்பதுண்டு Ok கதைக்கு வருவோமா? 

 

அந்த அம்மா கூப்பிட்டதும் நாங்க மூணு பேரும் வரமாட்டோம். யாராவது ஒருத்தர் தான் வருவோம்ன்னு சொன்னாங்க. முதல்ல இருக்கிறவர் பேர் செல்வம், இவர் வெற்றி, இவர் பேர் என்ன தெரியுமா? அன்பு இந்த மூன்று பேரில் யார் உங்க வீட்டுக்கு வரணும் சொல்லுங்க? அந்த அம்மா நான் போய் என் வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்னு போனாங்க.. வீட்டுக்காரர் கிட்ட சொன்னதும் ஒகே செல்வம் என்பவரை கூப்பிடுவோம் அப்பதான் நம்ம வீட்டுக்கு பணம் நிறைய கிடைக்கும் என்றதும்.. இல்லை, வெற்றியை அழைப்போம் நாம் வெற்றி பெறும் போதெல்லாம் வசதி, வாய்ப்பு, நம்மை தேடி வரும் என்று அந்த அம்மா சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான் என்ன சொன்னான் தெரியுமா? அன்புதான் வேண்டும். அன்பு வந்தா போதும் என்று மகன் சொல்வதைக் கேட்டு அந்த அம்மாவும், கணவரும் சேர்ந்து, "அன்பு நீங்க வாங்க" என்று சொன்னதும் அன்பு என்பவர் எழுந்து போனதும்... செல்வமும் வெற்றியும் பின்னாடியே போனாங்க. அந்த அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷம்! செல்வத்தையோ, வெற்றியையோ கூப்பிட்டா அவரவர் மட்டும்தான் வந்திருப்போம். ஆனால் நீங்கள் அன்பை அழைத்ததால் அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே வெற்றியும், செல்வமும் வந்து விடும் என்று சொன்னார்கள்.

 

என்ன குட்டிச்செல்லங்களே! அன்பு என்றாலே இயேசு கிறிஸ்துதான். புதிய வருஷத்தின் துவக்கத்தில் இயேசப்பாவை உங்க வாழ்க்கையில் அழைத்துப் பாருங்கள். அவர் எல்லா நன்மைகளையும் உங்களுக்கு தருவார். கண்களை மூடி Jesus நீங்க எங்க கூட இருந்தால் போதும்பா என்று சொல்லுங்க பார்க்கலாம். Very good. குட்டீஸ்!

- Mrs. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş