Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.01.2024
Share:

By Village Missionary Movement

Friday, 12-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 12.01.2024

 

விதைப்பும் விளைச்சலும்

 

"…என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்;…" - 1 சாமுவேல் 2:30

 

ஈசாக்கு விதை விiத்த போது நூறுமடங்கு பலன் அடைந்தான். எப்படி 100 மடங்கு பலன் கிடைத்தது? கர்த்தர் ஆசீர்வதித்ததினால்! கர்த்தர் அவனை எதனால் 100 மடங்கு ஆசீர்வதித்தார் என்று பார்ப்போமானால், ஆண்டவர் அவனுக்கு தரிசனமாகி, நீ எகிப்துக்கு போகாமல் நான் உனக்கு சொல்லும் தேசத்திலே குடியிரு என்று சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் அவர் விதைத்ததை 100 மடங்காக ஆண்டவராகிய கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்தார். அதோடு மாத்திரமல்ல பெலிஸ்தர் அவன்மேல் பொறாமை கொள்ளும் அளவிற்கு அவனுடைய ஆசீர்வாதம் விருத்தியடைந்து கொண்டே இருந்தது.

 

எனக்கன்பானவர்களே! இந்த நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த ஆசீர்வாதங்கள் உங்கள் ஊழியத்தில் இல்லையா? நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு உங்கள் வேலையில் இல்லையா? உங்கள் கைப்பிரயாசத்திற்கு ஏற்ற வருமானம் உங்கள் தொழிலில் இல்லையா? அதாவது பிரயாசத்திற்கேற்ற பலன் விதைப்பிற்கேற்ற விளைச்சல் இல்லையா? நீங்கள் உங்கள் செயல்பாடுகளை சிந்தித்து சீர்படுத்த வேண்டிய தருணம் இது. உங்கள் ஊழியத்தை தேவன் சொன்ன இடத்தில் செய்கிறீர்களா? உங்கள் வேலை ஸ்தலத்தில் கர்த்தருக்கு உண்மையாக சாட்சியாக வாழ்கிறீர்களா? உங்கள் வியாபாரத்தில் கீழ்க்கண்ட முறைப்படி செய்கிறீர்களா?

 

1) நீங்கள் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் கர்த்தருக்கு பிரியமானதா?

 

2) உங்கள் வியாபாரத்தை தினந்தோறும் ஜெபித்து ஆரம்பிக்கிறீர்களா?

 

3) உங்களுடைய தொழிலின் பாட்னர் கர்த்தருடைய சித்தத்தின்படி இணைக்கப்பட்டவரா? 

 

4) உங்கள் வியாபாரத்தின் வருமானம் மூலம் கர்த்தருடைய ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறதா?

 

அருமையானவர்களே! தேவ சமூகத்தில் அமர்ந்து மேற்கண்ட காரியங்களை ஜெபத்துடன் சிந்தித்து சீர்படுத்துங்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்திற்கான ஊற்று என்பதை மறந்து போக வேண்டாம். ஈசாக்கைப் போல கீழ்ப்படியுங்கள். அப்பொழுது தேவன் உங்கள் ஊழியங்களை, வேலையை, வியாபாரத்தை 100ரூ ஆசீர்வதித்து ஈசாக்கைப் போல உயர்த்துவார்.

 

நினைவிற்கு:   

"…என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியை போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்." (ஏசாயா 48:18) 

- K. பெஞ்சமின்

 

ஜெபக்குறிப்பு: 

நாளை நடைபெறும் சீஷத்துவ முகாமின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட, அநேக வாலிபர்கள் பங்கு பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al