Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11.01.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 11-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 11.01.2024

 

எழுப்புதல் விதை விழுந்த இதயங்கள்

 

"…தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்" - யாத். 36:2

 

எழுப்புதலைக் குறித்து அதிகம் பேசப்படும் காலம் இது. பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் சார்ந்த சகல வேலைகள் மற்றும் அதற்குண்டான தேவைகள் பற்றி மோசே இஸ்ரவேல் புத்திரரிடத்தில் தெரிவித்தபோது, எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்திற்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தார்கள். திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும் செய்தார்கள். ஏனென்றால் கர்த்தரின் வேலை கனத்துக்குரியது என்பதை அறிந்திருந்த அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. தீவிரமாக கர்த்தருக்காக செயல்பட்டார்கள்.

 

ஒரு கிராமத்தில், கிறிஸ்தவ வாலிபனொருவன் பாவத்திலும் அக்கிரமத்திலும் மீறுதலிலும் வாழ்ந்து கொண்டிருந்தான். எல்லா மக்களின் பாவங்களுக்காக சாபங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம்நாள் உயிரோடு எழுந்த இயேசுகிறிஸ்துவின் எழுப்புதல் விதை ஒரு நாள் அவனுக்குள் விழுந்து கிரியை செய்ய ஆரம்பித்தது. அதுவரை ஆண்டவருக்காக எதுவும் செய்யாத அவனால், பிற்பாடு சும்மா இருக்க முடியவில்லை. ஏதாவது என் ஆண்டவருக்கு செய்ய வேண்டும் என எண்ணினான். அங்குள்ள ஒரு பாரம்பரிய திருச்சபைக்கு மாலை அல்லது இரவு நேரத்தில் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைக்காக பாடல் பாடுவான். வேதம் வாசிப்பான். ஆண்டவரின் ஆலய காரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுவான். கர்த்தருடைய ஊழியங்களுக்கு அவனால் இயன்ற காணிக்கைகளை உற்சாகமாய்க் கொடுப்பான். யார் தன்னோடு பேசினாலும் அவர்களிடத்தில் எப்படியாவது இயேசுவை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் மேலோங்கியிருந்தது. M.A., M.Phil முடித்து Ph.D., படித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவர் அழுகிறார் என்ற செய்தியைக் கேட்டு படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு தாமதமின்றி கர்த்தரின் கனமான ஊழியத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான். இன்று குடும்பமாக அவருடைய ஊழியத்தை செய்வதற்கு கர்த்தர் பாக்கியம் கொடுத்திருக்கிறார், பயன்படுத்துகிறார்; கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

 

பிரியமான சகோதர சகோதரிகளே! எழுப்புதல் விதை விழுந்த இதயங்கள் சும்மா இருக்காது. விளைந்து கர்த்தருக்காக பலன் கொடுக்கும். இதை வாசிக்கிற, கேட்கிற உங்கள் இருதயத்தில் எழுப்புதல் விதை விழுந்துள்ளதா? 

- Bro. சிமியோன்

 

ஜெபக்குறிப்பு:

இயேசுவின் சந்ததி மூலம் சந்திக்கப்படும் சிறுபிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al