Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.01.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 10-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 10.01.2024

 

தேர்ந்தெடுக்கப்பட்ட விதை

 

"…நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்" - ஆதி.6:9

 

ஒரு காட்டில் கூட்டமாக யானைகள் வாழ்ந்து வந்தன. எங்கு சென்றாலும் கூட்டமாகவே செல்லும். அதில் ஒரு குட்டியும் தாய் யானையும் இருந்தது. நல்ல தீவனம் கிடைக்க யானைகள் ஒரு இடத்தில் இருந்து வேறு வேறு இடங்களுக்கு செல்லும். அப்படி இந்த யானைக் கூட்டங்கள் போகும் போது இந்த குட்டியானை எங்கே போனது என்று தெரியாமல் அம்மா யானை தேடி சென்றது. சில நாட்கள் தேடி தன் குட்டி யானையை கண்டு பிடித்தது. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் தன் பிள்ளையை நன்றாக அறிந்திருந்ததால் கண்டுபிடித்து விட்டது. இதேபோலத்தான், தேவன் பாவமும் மாய்மாலமும் நிறைந்த உலகில் அவருடைய பிள்ளைகளை அறிவார்.  

 

தேவன் இந்த உலகத்தில் மனிதர்களை படைத்தார். அவர்கள் பெருகினார்கள். பாவமும் பெருகியது. மனிதரின் பாவங்களைக் கண்ட தேவன் மனஸ்தாபப்பட்டு உலகை அழிக்க தீர்மானித்தார். ஆனால் இவ்வளவு பாவம் நிறைந்த மனிதர்களுக்குள் நீதிமானாக ஒரு மனிதனைக் கண்டார். அவர் யார் தெரியுமா? அவர்தான் நோவா! கர்த்தர் இந்த நோவாவுடைய குடும்பத்தை மட்டும் காப்பாற்றி, எல்லா ஜனங்களையும் ஜலத்தினால் அழித்துப் போட்டார். இந்த பூமியில் ஒரு புதிய சந்ததி தோன்ற தேவன் நோவாவை ஒரு விதையாகத் தெரிந்தெடுத்தார். அவர் மூலம் தேவனுடைய திட்டம் இப்பூமியில் நிறைவேறியது.

 

பிரியமானவர்களே, இன்று குடும்பமாய் வாழ்கிற, வாழப் போகிற ஒவ்வொரு தனிமனிதனும், குடும்ப தலைவர்களும் தன் குடும்பத்திற்கு நாமே பொறுப்புள்ளவர்கள் என்பதை எவ்வளவாய் உணர வேண்டும். நாம் நல்ல விதையாக, கர்த்தரைப் பிரியப்படுத்தும் விதையாக வாழும் போது நம் குடும்பம் தேவனுக்குள் வளர்வதற்கு காரணமாக இருப்போம். நோவாவைப் போல் ஆண்டவர் நம்மை நம்பியுள்ளார். நம்முடைய தேவபக்தியுள்ள வாழ்க்கை ஒரு விதை. அதன் மூலம் தேவபக்தியுள்ள சந்ததி உருவாகும் என்பது நிச்சயம்! ஆகவே அவர் நம் கரத்தில் கொடுத்துள்ள குடும்பத்தை, பிள்ளைகளை, உறவுகளை, பொறுப்புகளை கவனத்தோடு காத்துக் கொள்வோம். உலகத்தோடு நாம் கலந்து விடாதபடி தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட குடும்பமாக வாழ்வோமென்றால் பெரிய பலன் உண்டாகும். தெரிந்தெடுக்கப் பட்டவர்களாகிய நாம் முன்மாதிரியான வாழ்க்கை வாழும் போது நம் பிள்ளைகள் மூலம் வரும் சந்ததி தேவபக்தியுள்ள சந்ததியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்கள் ஒவ்வொருவரும் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al