Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.01.2024
Share:

By Village Missionary Movement

Monday, 08-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 08.01.2024

 

ஆசீர்வதிக்கப்பட்டவள்

 

"ஸ்திரீகளுக்குள்ளே ... யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாய் இருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே" - நியா. 5:24

 

பழைய ஏற்பாட்டில் எளிமையான பெண்ணாக கூடாரத்திலே வாசம் பண்ணின ஸ்திரீயாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தாள். அவள் ஒன்றும் யுத்தத்துக்கு சென்று போரிடவில்லை. ஆனால் அப்படி சொல்லப்பட காரணம் என்ன? இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லப்பானத்தை செய்தபடியால் கர்த்தர் அவர்களை கானானியரின் ராஜாவாகிய யாபீனின் கையில் விற்றுப் போட்டார். அவன் இஸ்ரவேல் புத்திரரை 20 வருஷமாய் கொடுமையாய் ஒடுக்கினான். அப்பொழுது தெபொராள் என்னும் தீர்க்கதரிசி இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தாள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு மனமிரங்கி தெபொராள் மூலம் பாராக்கை அனுப்பி சிசெராவுடன் யுத்தம் செய்ய அனுப்பினார். அப்படி அனுப்பும்போது இந்த யுத்தத்தில் மேன்மை உனக்கு கிடைக்காது, ஆனால், கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று கூறினாள். அதன்படி கேனியனாகிய ஏபேரின் மனைவியாகிய யாகேல் சிசெராவை கூடார ஆணியால் கொன்று போட்டாள்.  

 

கூடாரத்திலே வாழ்ந்து வந்த அந்த யாகேலுக்குத்தான் எவ்வளவு துணிச்சல்! தன்னந்தனியாக மிகப்பெரிய போர் வீரன் சிசெரா என்ற சேனாதிபதியை கொன்று போட்டாள். அவளைப் பொறுத்தவரை அது சிறிய, சில நிமிடங்களில் செய்து முடிக்கிற வேலையாகத்தான் இருந்தது. கர்த்தர் அவளைக் கொண்டு பெரிய காரியத்தைச் செய்து முடித்தார். அதன்பிறகு தேசம் நாற்பது வருடம் அமைதலாயிருந்தது என்று பார்க்கிறோம்.

 

ஆம், எளிய பெண்ணாகிய யாகேலைக் கொண்டு கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார். எனவே சரியான நேரத்தில் தேவனின் துணையோடு செய்யப்படும் எந்த சிறிய காரியமும், மிகப்பெரிய பலனை, ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும். ஆகவே நாம் விதைக்கும் விதை சிறியதுதான், ஆனால் அது நல்ல நிலத்தில் விதைக்கப்படும்போது முப்பதும், அறுபதும் நூறுமாய் பலன் கொடுக்கும் என அறியலாம். அதுபோல் நாம் கூறும் ஆறுதலான வார்த்தைகள், நாம் செய்யும் சிறிய ஜெபம், மிகப்பெரிய பலனைக் கொண்டு வரும். தற்கொலைக்கு நேராக ஓடும் எத்தனையோ பேர் சுவிசேஷத்தை கேட்டு மனம் மாறி ஆசீர்வாதத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும் பெற்றுக் கொண்டதையும் கேள்விப்பட்டிருக்கிறோமே!

  

என்னுடைய சிறுவயதில் நான் செய்த சிறிய ஜெபம் "இயேசப்பா இரட்சியும்" என்ற வார்த்தைகள்தான். அதன் பொருள் கூடத்தெரியாமல் சொல்லப்பட்ட ஜெபத்தை கேட்டு தேவன் ஏற்ற காலத்தில் எவ்வளவோ விலையேறப் பெற்ற இரட்சிப்பை சுதந்தரிக்க உதவி செய்தார். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் ஆண்டவர் நமக்காக நூறு அடி எடுத்து வைத்து காரியத்தை ஜெயமாக்குவார். எனவே இந்த புதிய வருடத்தில் சோர்ந்து போகாமல் நம்மால் இயன்ற காரியங்களை செய்வோம். சிறிய அளவில் சுவிசேஷ விதையை விதைப்போம். பெரிய அளவில் அறுவடையை எதிர்பார்ப்போம்; கர்த்தர் தாமே நமக்கு நல்ல பங்கை தருவாராக! ஆமென்

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

நமது ஆமென் வில்லேஜ் டிவி சேனல் சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş