Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.01.2024
Share:

By Village Missionary Movement

Saturday, 06-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 06.01.2024

 

வார்த்தையென்னும் விதை

 

"நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்" - ரோமர் 10:10

 

ஒரு மரத்திலிருந்து ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும். ஆனால் ஒரு தீக்குச்சி ஆயிரம் மரங்களை எரித்துவிடக்கூடும். அதுபோல நம் வார்த்தைகளும் அநேகரை கட்டி எழுப்பவும் செய்யும், அநேகரின் வாழ்வை இடித்துத் தள்ளவும் செய்யும்.

 

ஒரு வீட்டின் தலைவர் தினமும் காலையில் எழும்பி நேர் முழங்காலில் நின்று ஜெபிப்பார். தன்னுடைய சரீரத்தில் பெலவீனங்கள் இருந்தும் தேசத்தின் ஜனங்களுக்காக வாரம் ஒருமுறை தன் நண்பரோடு இணைந்து தன் வீட்டில் ஜெபித்து வந்தார். இரட்சிக்கப்படாத அவரது மனைவி கர்த்தரை அறியும் விஷயத்தில் ஒரு நாளும் கட்டாயப்படுத்தப்படவில்லை. தான் தியேட்டர் சென்று படம் பார்க்காவிட்டாலும், மனைவி செல்வதை தடை செய்யாமல், தானே அழைத்துச் சென்று விட்டும் வந்தார். கணவர் தனக்கு கொடுத்த சுதந்திரம், கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கை, வாழ்க்கை முறை, பேசும் விதம் மற்றவர்களுக்காக கர்த்தரிடம் பரிந்து பேசுவது இவற்றைப் பார்த்து மனைவியும் கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொண்டார். தன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்த்து, தன் வாழ்வு மற்றும் அன்பான பேச்சின் மூலம் அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி உள்ளார். அது வேறு யாருமல்ல, என் தாயார்தான்.

 

இதேப்போல்தான் நகோமி மோவாப் தேசத்தில் பெண் கொண்டாலும் குடும்பத்தில் கர்த்தரைப் பற்றி பேசியதின் மூலமும், தான் நடந்து கொண்ட சாட்சி வாழ்வின் மூலமும் தன் மருமகளான ரூத்தை ஆதாயம் பண்ணினாள். ஆம், நகோமி தன் கர்த்தரை பற்றி பேசிய வார்த்தைகள் விதையாய் ரூத்திற்குள் சென்றது. ஆகவே ரூத் நகோமியையும் தேவனையும் விடாமல் உறுதியாய் பற்றிக் கொண்டாள். நகோமியின் வார்த்தையாகிய விதையின் பலன் வேதத்தில் ஒரு புத்தகமாக இடம் பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்து பிறக்கவும் ரூத்தின் சந்ததியை தேவன் தெரிந்து கொண்டார்.

 

இதை வாசிக்கும் அன்பரே! நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்களானால் உங்கள் வார்த்தைகள் கிறிஸ்துவைப் பற்றியதாக இருக்கட்டும். மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. அதுபோல் உங்களின் வாயின் வார்த்தைகள் அநேகரது வாழ்வை உயிர்ப்பிக்கும், அநேகரை தட்டியெழுப்பும், கட்டுவிக்கும். என் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் கிறிஸ்துவுக்குள் வளர்த்ததோடு மூவரையும் கர்த்தருக்கு பணியாற்றவும், ஊக்கப்படுத்தி தேவனுக்காக கொடுத்தார்கள். ஆம், நாமும் மற்றவர்களிடம் சொந்தக் கதை, மற்றவர்களின் விஷயம் என பேசாமல் கர்த்தரைப் பற்றி பேசுவோம். வார்த்தையாம் விதையை விதைத்து ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

நமது வளாகத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş