Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.01.2024
Share:

By Village Missionary Movement

Wednesday, 03-Jan-2024

இன்றைய தியானம்(Tamil) 03.01.2024

 

இலாபமான விதை

 

"தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்" - நீதி. 11:26

 

என் அப்பா கருப்பையா இயேசுவை அறியாதவர். ஒரு முறை நாம் நடத்தும் வாலிபர் முகாமிற்கான வால் போஸ்டரைப் பார்த்துவிட்டு, என்னிடம் பெரிய மாநாடு நடத்தப் போகிறாயா? என்றார். நான் ஆமாம் என்றதும், எத்தனை பேர் வருவார்கள் என்றார். நான் 50 ஆயிரம் வாலிபர்கள் என்றேன். இதனால் நமக்கு லாபம் உண்டா? என்றார். நான் ஆமாம் நமக்கு நிறைய லாபம் உண்டு என்றேன்.  

 

இதே போல்தான் நம் தேவைகளை சந்தித்து, நம்மை பாதுகாக்கும் தேவனுக்கு நம்மால் லாபம் உண்டா? அதாவது பிரயோஜனமுண்டா? என நாம் யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியம். என்னால் தேவனுக்கு என்ன லாபம் கொடுக்க முடியும் என்கிறீர்களா? கிறிஸ்தவ வரலாற்றை திரும்பி பார்ப்போமென்றால் அநேகர் தங்கள் திறமைகள், பணம், நேரம் ஏன் தங்களையே விதையாகத் தந்ததின் விளைவாகத் தான் நானும் நீங்களும் தேவனை அறிந்து கொண்டோம். இராக்லாந்து என்னும் விதையால் சிவகாசியில் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். சாரா டக்கர் தன் பணத்தை திருநெல்வேலியில் விதைத்ததின் பலன்தான் சாராடக்கர் பள்ளி, கல்லூரி உருவானது. இதன்மூலம் கர்த்தரை அறிந்த மாணவ, மாணவிகள் ஏராளம். ஒரு தக்காளி பழத்திற்குள் எத்தனை விதைகள் உள்ளன! அது போல் நமக்குள்ளும் தேவன் ஜீவன், தாலந்துகள், திறமைகள், பணம், நேரம் பிள்ளைகள் இவற்றை விதைகளாய் கொடுத்துள்ளார். தேவன் தந்த விதைகளை அவருக்கென்று விதைக்கும் போது அதிகமான பலனைப் பெறலாம். தேவனுடைய இராஜ்யத்திற்கும் இலாபம் கொடுக்கிறவர்களாயிருப்போம். ஆனால் அவைகள் விதைக்கப்படாமல், அதாவது பயன்படுத்தப்படாமல், இருக்குமென்றால் அதனால் இலாபம் ஒன்றுமில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் தேவன் அவருக்கு கொடுத்த அனைத்தையும் தேவனுக்காய் விதைத்து, தனக்கு இலாபமாய் தோன்றுகிறதை நஷ்டமென்று விட்டு தேவராஜ்யத்திற்கு பெரிய இலாபத்தைக் கொண்டு வந்தார். உங்கள் விதைகளை என்ன செய்கிறீர்கள்? பலன் தர விதைத்துள்ளீர்களா? இல்லை சுயநலமாய் கட்டி வைக்கிறீர்களா? உங்கள் நேரம், தாலந்து, திறமை, ஜீவன், பணம், பிள்ளைகள் இவற்றை கர்த்தருக்கென்று விதைக்கும் போது நிறைவான பலனைப் பெறலாம். பரலோகம் மகிழும்; தேவன் உங்களில் மகிமைப்படுவார். சுயமாய் அனுபவித்து கட்டி வைத்தால் ஜனங்கள் சபிப்பார்கள் என்று மேற்கண்ட வசனத்தில் வாசிக்கிறோம். இந்த ஆண்டை புறப்பட்டுப் போய் செயல்படும் ஆண்டாய் தேவன் தந்துள்ளார். தேவன் நமக்கு தந்துள்ள காரியங்களை நமக்குள் முடக்கி வைத்து விடாமல் விதைக்க புறப்படுவோம். முதல் அடி வைப்போம். தேவன் ஆசீர்வதிப்பார்.  

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு:                                                                                                                      

தெபோராள் குழுக்கள் மூலம் சந்திக்கப்படும் கிராமங்களில் தேவன் பெரிய எழுப்புதலைக் கட்டளையிடஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş casibom jojobet giriş casibom milanobet piabellacasino betpas bahiscasino atlasbet betpas casinoroyal bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom holiganbet jojobet casibom vaycasino romabet