Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31.12.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 31-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 31.12.2023 (Kids Special)

 

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்" – 1 தீமோத்தேயு 1:15

 

யோசுவாவும், ஜோசப்பும் நல்ல நண்பர்கள் இருவரும் அழகாபுரி என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார்கள். எப்பொழுதும், யாரைப் பார்த்தாலும் இயேசுவைப் பற்றி சொல்வது யோசுவாவிற்கு வழக்கம். தன்னிடத்தில் யாராவது "மணி என்ன?" என்று கேட்டால் கூட உடனே அடுத்தபடியாக சுவிசேஷம் சொல்லி விடுவான். அவன் நண்பன் ஜோசப் நன்றாக பாட்டு பாடுவான், சர்ச்சில் நல்ல ஆக்டிவ் ஆக இருப்பான், போதகர் ஐயாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்றே வேலைகளை செய்வான். சுவிசேஷம் சொல்லணும் டா என்று யோசுவா இவனிடம் சொன்னால் இருக்கட்டும் டா, அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லி விடுவான். இப்படியே நாட்கள் போயின.  

 

ஒரு நாள் இருவரும் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த வேளையிலே, விபத்தில் மாட்டி உயிரிழந்தனர். அப்போது இருவரையும் தேவதூதர்கள் மேலே கொண்டு சென்றார்கள். அங்கே ஒருவர், ஒரு பெரிய gift ஐ எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது ஜோசப் ஆஹா இந்த gift நமக்குத் தான், ஏன்னா நேத்து கூட நா புதுசா ஒரு பாட்டு எழுதி இருக்கேனேன்னு மனதில் நினைத்தான். அவர், அந்த gift ஐ யோசுவாவிடம் கொடுத்தார்.

 

ஜோசப்பிற்கோ முகம் வாடிப்போனது. அவரிடம் ஏன் இவனுக்கு கொடுத்தீங்க. நான்தான் சபையில் ஆக்டிவ் ஆக இருப்பேன். புதுப்புது பாட்டெல்லாம் பாடுவேன், போதகர் கூட என்னைப் பாராட்டினாரே என்று சொன்னான். அவரோ உன் பின்னால் திரும்பிப்பார் என்றார். இவன் பின்னால் யாருமில்லை. ஆனால் யோசுவாவின் பின்னால் ஒரு கூட்டமே இருந்தது. இவர்களெல்லாரும் யோசுவா சுவிசேஷம் சொல்லி இரட்சிக்கப்பட்டவர்கள். இயேசுவுக்காக விலைமதிக்க முடியாத முத்துக்களை கொண்டு வந்தது யோசுவாதான் என்று சொல்லி இவனை நரகத்திற்கு கொண்டு செல்ல போன போது, கனவு கலைந்து எழுந்தான். ஜோசப் ஆண்டவரிடம் அழுது ஜெபித்து சுவிசேஷம் அறிவிக்க அன்றே தன்னை ஒப்புக் கொடுத்தான்.  

 

என்ன குட்டீஸ், நீங்களும் உங்க friends, தெரிஞ்சவங்களுக்கு சுவிசேஷம் சொல்லி, பாவத்துல இருக்குற ஆத்துமாவை பரலோகத்திற்கு நேராக திருப்புவீங்களா? மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது நம் மேல் விழுந்த கடமை. அதை நாம் தான் கட்டாயம் செய்யணும். ஆனால் அதற்கு மிகுந்த பலன் உண்டு. ok.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş betcio jojobet giriş casibom milanobet piabellacasino betpas bahiscasino atlasbet betpas casinoroyal bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom holiganbet jojobet casibom vaycasino romabet