Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.12.2023
Share:

By Village Missionary Movement

Friday, 29-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 29.12.2023

 

ஓட்டப்பந்தயம்

 

"…நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" - 1 கொரிந்தியர் 9:24

 

உக்ரைனைச் சார்ந்த உடற்பயிற்சியாளர் "லாரிசா வேற்றினினா" 18 ஒலிம்பிக் பதக்கங்களை பெற்று சாதனை புரிந்தாள். 1956, 1960, 1964 ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெற்றி பெற்று அவள் அந்த பதக்கங்களை பெற்றாள். பின்னர் 2012ல் லண்டன் விளையாட்டுப் போட்டிகளில் 4200 மீட்டர் (Free style) தொடர் நீச்சல் பந்தயத்தில் மைக்கேல் பெல்ப் தனது 19 ஆவது தங்கப் பதக்கத்தை பெற்ற பொழுது ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 48 ஆண்டுகளாக இருந்த சாதனை முறியடிக்கப்பட்டது. "வரலாற்றில் வேற்றினினா மறக்கப்பட்டு விட்டாள்" என்று இண்டர்நேஷனல் ஜிம்னாஸ்டிக் என்ற பத்திரிக்கை வெளியீட்டாளர் கூறினார். ஆம், புதிய சாதனைகள் செய்யப்படும் போது பழைய சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன.

 

சில சமயங்களில் கடின உழைப்பு மறக்கப்பட்டு விடுகிறது என்று பவுல் அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார். விளையாட்டு வீரர்கள் அழிந்து போகும் பதக்கங்களை பெறுவதற்காக அவர்களது சரீரங்களை கடுமையான ஒழுங்குமுறை பயிற்சிக்கு கீழ்ப்படுத்துகிறார்கள். ஆனாலும் அவர்களது திறமைகளும் அவர்கள் பெற்ற பதக்கங்களும் ஒரு காலகட்டத்தில் அனேகருடைய நினைவில் இல்லாமல் மறக்கப்படுகின்றன. உலகத்தோடு அழிந்து போகும் ஒரு பதக்கத்திற்கு விளையாட்டு வீரர்கள் தங்கள் சரீர அவயவங்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடாய் வைக்க எவ்வளவு பிரயாசப்படுகிறார்கள். வேதாகமத்தில் பார்க்கும் போது அழிவில்லாத நித்திய கிரீடமாகிய பந்தய பொருள் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறதை நிருபங்களில் வாசிக்கின்றோம். ஆக நமது ஓட்டம், நமது பிரயாசம் மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, பழைய வருடம் முடிந்து ஒரு புதியதொரு வருடத்தில் பிரவேசிக்க ஆயத்தமாக இருக்கின்றோம். அதே வேளையில் நாம் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் நமது ஆவிக்குரிய ஓட்டத்தில் பரலோகம் போய் சேரும் வரை நாம் தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியர் நிருபத்தில் எழுதும் பொழுது நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் என்று ஆலோசனையாக கூறுகிறார். நமது பந்தய பொருளை நாம் இழந்து போகாதபடி கவனமாக இயேசுவை நோக்கி ஓடுவோம். ஏனெனில் உங்கள் ஓட்டத்தையும், பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்கு நமது தேவன் அநீதியுள்ளவரல்லவே. வரும் புதிய ஆண்டிலும் உங்கள் ஓட்டம் நன்மையாகத் தொடர சர்வ வல்ல தேவன் கிருபை செய்வாராக. ஆமென்!

- Bro. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis