By Village Missionary Movement
Thursday, 28-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 28.12.2023
ஆசீர்வாதமான ஆலோசனை
"அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?" - சகரியா 4:10
மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரின் பலநாள் கனவு, கார் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று! அதுபோலவே கார் கம்பெனி தொடங்கப்பட்டு, புதிதாக கார் ஒன்று வடிவமைக்கப்பட்டது. அக்காரை அறிமுகப்படுத்த விழா ஒன்றை ஏற்பாடு செய்து அநேகருக்கு அழைப்பிதழ் கொடுத்தார். பெருங்கூட்ட மக்கள் சூழ்ந்து நிற்க, அந்த குறிப்பிட்ட நேரத்தில் புதிய காரை அந்த அறையிலிருந்து வெளியே ஓட்டிக் கொண்டுவரும் போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் வாசல் நிலையைவிட புதிய கார் 5 செ.மீ. அளவு உயரமாக இருந்தது. எனவே காரும் வெளியே வரவில்லை: அங்கிருந்த ஜனங்களும் முறுமுறுக்க தொடங்கினார்கள். எங்களுடைய வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு வந்தோம் என சிலர் புலம்பவும் கூட ஆரம்பித்தார்கள். இதை கவனித்துக் கொண்டிருந்த கம்பெனியின் காப்பாளர், "காரின் டயர்களில் காற்றை இறக்கிவிட்டால் உயரம் குறைந்து விடும், காரை வெளியே கொண்டு வந்த பின்பு டயர்களில் காற்றை நிரப்பி கொள்ளலாம்" என்றார். காப்பாளரின் சொல் கேட்டு அப்படியே செய்தனர். செல்வந்தர் மனம் மகிழ, கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேதத்திலே, சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் குஷ்டரோகத்தினால் கொடிய வேதனையில் இருந்தான். அவன் வீட்டில் இஸ்ரவேலில் இருந்து அடிமையாகக் கொண்டு வரப்பட்ட ஒரு சிறுபெண் இருந்தாள். அந்த சிறுபெண் தன் நாச்சியாரைப் பார்த்து "என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும். அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்" என்றாள். மேலும் நாகமானின் வேலைக்காரனும் "ஸ்நானம் பண்ணும் அப்பொழுது சுத்தமாவீர்" என்று சொன்னார். நாகமான் படைத்தலைவனாக இருந்தபோதிலும் இருவருடைய சொற்கேட்டு சுகத்தைப் பெற்றான். இவர்களின் ஆலோசனையால் நாகமான் ஆசீர்வதிக்கப்பட்டான்.
இதை வாசிக்கின்ற அருமையானவர்களே! நம்முடைய வாழ்விலும் கூட "இனி அவ்வளவுதான், என் பிரச்சனைக்கு தீர்வே இல்லை" என நாம் நினைத்து அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். இவர்கள் மூலமாகவா என் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகப் போகிறது என நாம் அற்பமாய் நினைக்கிற நபர்களின் மூலமாகவே நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். நல்ல ஆலோசனை வரும் போது சொல்லும் நபர் யாராக இருந்தாலும் அந்த ஆலோசனையைக் கேட்டு நாம் நம்முடைய காரியத்தை நடத்தும்போது நம்முடைய காரியம் வாய்க்கும். எனவே நாம் நம்முடன் இருக்கிற நபர்களையும் நம்மைச்சுற்றி இருக்கிற யாவரையும் அற்பமாய் எண்ண வேண்டாம். நமக்காக சிலுவையில் மரித்த இயேசு நம்மை அற்பமாய் எண்ணியிருந்தால் நமக்காக சிலுவையில் மரித்து இருப்பாரா? சிந்திப்போம்.
- Sis. மாரியம்மாள் ரூத்
ஜெபக்குறிப்பு:
ஜெபக்குழுக்களுக்கு என்று வெளியிடப்படும் ஜெபக்குழு தலைவர்கள் கையேடு என்ற பத்திரிக்கைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864