Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.12.2023
Share:

By Village Missionary Movement

Monday, 25-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 25.12.2023

 

சமாதான கிறிஸ்துமஸ்

 

"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்" - லூக்கா 2:14

 

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறக்க ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது இந்த உலகிற்கு சமாதானத்தைக் கொடுக்கவே! பாவத்தில் உழன்று தவிக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசு கொடுக்கவிருக்கும் மிகப்பெரிய பரிசு சமாதானமான வாழ்க்கையே!

 

மனிதர்கள் எல்லோரும் பரலோகம் செல்வோம் என்று கூவுவதால் எந்த பயனும் விளையப் போவதில்லை. பரலோகம் நாம் நினைப்பது போல சாதாரணமான இடம் அல்ல. அது இயேசுவானவர் தங்கும் மிகப் பெரிய உன்னதமான இடம். இயேசு பரிசுத்தர் என்றால், பாவம் இல்லாதவர் என்றால் அவருடன் இருப்பவர்களும் அவ்வண்ணமே இருக்க முடியும். நமது வீட்டை சுத்தமாய் வைக்க ஆசைப்படுகிறோம். நடுவீட்டில் அசிங்கத்தை போட்டு அதனை சகித்துக் கொண்டு வாழ மாட்டோம். அதை போலத்தான் நமது ஆண்டவர் இயேசுவும். அவருடைய வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. ஆனால் அது பாவிகளுக்கு அல்ல. பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே. அப்படிப்பட்ட இடத்திற்கு உங்களையும், என்னையும் அழைத்துச் செல்ல வந்தவர் தான் இயேசு கிறிஸ்து.

 

கிறிஸ்துமஸ் என்பது இயேசுவின் வருகையின் அர்த்தத்தை உணர்த்தும் நாள். அவர் வந்த நோக்கத்தை முழுமையாக அறிய நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த நற்செய்தியை சொல்ல வேண்டும். இயேசு பிறந்தவுடன் இந்த உலகத்திற்கு வந்த முதல் செய்தி என்னவென்றால் "உங்களுக்கு சமாதானம்"! ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தூதர்களை பார்த்து பயந்து போக, அவர்கள் "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்றார்கள். இயேசு இந்த உலகத்தில் பிறந்தவுடன் இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்று, இருளில் இருப்பவர்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். இரண்டு, உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்ற செய்தி பரலோகில் இருந்து பூமிக்கு வந்தது.

 

பிரியமானவர்களே, உள்ளத்தில் இயேசு என்று பிறக்கிறாரோ அன்றுதான் உண்மையான கிறிஸ்துமஸ் நன்னாள். இந்த இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால் நானும் பரலோகம் செல்வேன் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை. பரலோகத்திற்குள் பாவத்தோடு நுழைய முடியாது. பாவமன்னிப்பை பெற்றவர்கள் மட்டும்தான் நுழைய முடியும். எனவே, பாவ இருளில் இருப்பவர்கள் இயேசுவை உள்ளத்தில் பிறக்கச் செய்வதன் மூலம் பெரிய வெளிச்சத்தைக் காண முடியும். அப்படிப்பட்ட வெளிச்சத்தைக் கண்டவர்கள் மட்டுமே மிகப்பெரிய சமாதானத்தை காணமுடியும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

- Bro. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

பணித்தள ஊழியங்களுக்கு அவசரமாக 50 இருசக்கர வாகனங்கள் தேவை. உதவிடும் பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş