By Village Missionary Movement
Sunday, 24-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 24.12.2023 (Kids Special)
X-MAS வந்தாச்சு
"…மிகவும் சிறியவராகிய… இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்" - மத். 25:40
Hai குட்டீஸ், டிசம்பர் மாதம் என்றாலே நம் மூளையில் store ஆகி இருப்பது கிறிஸ்துமஸ்தான். அரையாண்டு தேர்வெல்லாம் அப்புறம் தான். காரணம், புது Dress, sweets, cake எல்லாம் கிடைக்கும். அப்புறம் Church program, Dance. Drama இப்படி ஜாலியா இருக்கும். அப்படித்தானே! ok, இப்போ ஒரு x-mas story கேட்போமா?
ஜாய் என்ற சின்ன பொண்ணு அவங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை. அதனால் செல்லமாக வளர்ந்து வந்தாள். அப்பாவும் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பாங்க. நமக்குத்தான் எல்லாமே கிடைக்குதே மற்றவர் எப்படி இருந்தா என்ன? என்று நினைக்காம அவங்க தெருவில் உள்ள வயதானவர்களுக்கு உதவி செய்வாள். கஷ்டப்படுகிறவர்களை பார்த்தா உடனே இரக்கப்பட்டு அப்பாகிட்ட சொல்லி உதவி பண்ணுவா. சூப்பர் - ல, நீங்களும் தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வீங்களா குட்டீஸ்? கண்டிப்பா செய்யணும். "ஜாய் குட்டி, இன்றைக்கு கடைக்கு போகலாமா? X-mas க்கு தேவையான things வாங்கிட்டு வரலாம் என்று அப்பா சொன்னதும் . . . ரொம்ப சந்தோஷமா கிளம்பினா. things எல்லாம் வாங்கி விட்டு, ஒரு கடையில் Juice குடித்துக் கொண்டிருந்தாங்க. அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். அவனை நன்றாக கவனித்து பார்த்த ஜாய் ஏ ராஜூ என்று கூப்பிட்டாள். இது யாரும்மா என்று அப்பா கேட்கவும், அப்பா இவன் என்னோடு வகுப்பில் படிக்கும் ராஜூப்பா. ஆமா, உனக்கு என்னாச்சு இப்ப School க்கு வர்றதே கிடையாது என்று ஜாய் கேட்டவுடன், ராஜூவின் கண்கள் கலங்கினது. என் அப்பாவுக்கு நடந்த விபத்தில் காலை இழந்துவிட்டார். வீட்டிற்கு வருமானமில்லை. நான் வேலை பார்த்துதான் சாப்பிடுகிறோம் என்று சொன்னதும் ஜாய்க்கு வருத்தமாக இருந்தது. அப்பா எனக்கு x-mas க்கு Dress லாம் வேண்டாம்பா. ராஜூவுக்கும், அவங்க அப்பா, அம்மாவுக்கும் எடுத்து கொடுப்போம் என்றதும், ஜாய்க்கு இருக்கிற இரக்க குணத்தை நினைத்து அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
x-mas அன்றைக்கு ராஜூ வீட்டிற்கு சென்று விருந்து கொடுத்து, புத்தாடைகளை பரிசாக கொடுத்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது மட்டுமா? இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியையும், அவரின் அன்பையும் பற்றி சொல்லும் போது, அவங்க உள்ளத்தில் இயேசு பிறந்து விட்டாரே என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் முகத்தில் சந்தோஷம்! ராஜூவின் அப்பாவிற்கு செயற்கைகால் பொறுத்த எனக்குத் தெரிந்தவர்களிடம் நான் பேசுகிறேன் என்று அப்பா சொல்ல ஜாய்க்கு ஒரே சந்தோஷம். அவள் இந்த x-mas ஐ அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் - ஆக கொண்டாடினாள். குட்டிப் பிள்ளைகளே! கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறந்திருப்பதை அறிவிப்பதோடு மாத்திரமல்ல நற்கிரியைகள் மூலம் நிரூபிக்கவும் வேண்டும். ok வா?
- Mrs. பியூலா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864