Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.12.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 21-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 21.12.2023

 

கிறிஸ்துமஸ் பரிசு

 

"…வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும்…" - அப்.20:35

 

"அப்பா! என் கூட படிக்கிற சுரேஷ் ரொம்ப ஏழைப்பா. அவனுக்கு கிறிஸ்துமஸ்க்கு டிரஸ் தர்றேப்பா" ஆவலோடு தன் தகப்பன் டேனியேலிடம் அனுமதி கேட்டான் டேவிட். "நேற்று தான் டிரஸ் எடுத்தோமே. அப்பவே சொல்லிருந்தா கூட ஒரு செட் எடுத்திருக்கலாமே" என்றார் டேனியேல். "எனக்கு எடுத்த இரண்டு செட்டில் ஒன்றை அவனுக்குத் தர்றேன்பா" என டேவிட் சொல்லி முடிக்கும் முன் "அது என்ன விலைன்னு உனக்குத் தெரியுமாடா?" என கோபமாக கத்தினார் டேனியல். "அப்பா! ஏழைக்குக் கொடுப்பது இயேசுவுக்கு கொடுப்பது அப்பா. விலை உயர்ந்ததைத் தான்பா கொடுக்கணும். ப்ளீஸ்ப்பா! அவன் கண்களில் கண்ணீரும் வடிந்தது.

 

"இரண்டு டிரஸ்ல ஒன்ன கொடுத்தா நியூ ஈயருக்கு கிறிஸ்துமஸ் டிரஸ்ஸையே போட்டுக்கோ வேற எடுக்க மாட்டேன்" என்று உறுதியாக சொன்னார் டேனியேல். "தேங்ஸ்ப்பா" என்று மலர்ந்த முகத்துடன் கூறினான் டேவிட். "புதுப்புது ஆடைகளாய் அணிய விரும்பும் தன் மகனா இப்படிப் பேசுகிறான்" என வியப்பில் ஆழ்ந்தார் டேனியேல். கிறிஸ்துமஸ் என்றால் என்ன? உன்னத தேவன் தன் ஏக மைந்தனை இந்த உலகத்திற்கு பரிசாகக் கொடுத்ததுதான். இது மிகப்பெரிய கொடை! 

 

திருமணத்திற்கு முன் கர்ப்பவதியானால் யூத சமுதாயத்தினர் கல்லெறிந்து கொல்லுவார்கள் என்ற சமுதாயக் கட்டுப்பாடு தெரிந்திருந்தாலும் காபிரியேல் தூதன் மூலம் செய்தி அறிந்த கன்னிமரியாள் தேவகுமாரனைப் பெற்றெடுக்க தன்னையே அர்ப்பணித்தாள்.  

 

வானநூல் அறிஞர்கள், விண்மீன் வழிகாட்ட, வெகுதூரம் கடந்து வந்து இயேசு பாலனைக் கண்டனர். பிறந்திருப்பவர் ராஜாதிராஜா என்பதைக் குறிக்க பொன்னையும், அவர் உலக மக்களுக்காக பலியாவார் என்பதை எடுத்துரைக்க வெள்ளைப் போளத்தையும், அவரின் இறையாண்மையின் நறுமணம் உலகமெல்லாம் பரவும் என்பதை உணர்த்த தூபவர்க்கத்தையும், காணிக்கையாகப் படைத்தனர். இப்பொருட்கள் அனைத்தும் விலைமதிப்புள்ளவைகள்.

 

இன்று நாம் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்? நாம் புத்தாடைகளை அணிந்து, விருந்து அருந்தி, உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பலகாரங்கள் அனுப்பி கொண்டாடுகிறோம். வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் ஏழைகளைப் பற்றி நினைக்கிறோமா? ஏழைகளுக்கு, மிஷனெரிகளுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களை மகிழ்வில் ஆழ்த்துவோம். நமக்குள்ளதிலிருந்து எடுத்து கஷ்டப்படும் ஜனங்களுக்கு கொடுத்து தியாக மனப்பான்மையோடு கிறிஸ்துமஸை கொண்டாடுவோம். தன் நேசகுமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பிய பரமபிதாவின் தியாகம் எவ்வளவு பெரியது என்பதை சிந்தித்தால் நம்மால் தியாகமில்லாமல் கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது.

- Mrs. வனஜா பால்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

ஏழாயிரம் மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்கின்ற இலக்கை அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al