Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.12.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 20-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 20.12.2023

 

நற்செய்தி

 

"…நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்" - நீதிமொழிகள் 15:30

 

லில்லியின் கணவர் இராணுவத்தில் எல்லைப் படையில் பணியாற்றினார். ஆனால் அநேக மாதங்களாக அவரிடமிருந்து பணமோ, தகவலோ வரவில்லை. எனவே லில்லி தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற வேலைக்குச் சென்றாள். கிறிஸ்துமஸ்க்கு பிள்ளைகளுக்கு டிரஸ், கேக் மற்றும் பலகாரங்கள் வாங்க அவளது சொற்ப வருமானம் போதுமானதாக இல்லை. அப்போது லில்லியின் கணவரிடமிருந்து ஒரு நற்செய்தி வந்தது. "நாளை வீட்டிற்கு வருகிறேன்" என்பதே அது! அவளது அனைத்து கவலைகளும் பறந்தன. வந்தவர் மனைவி, பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்தார். அவர்களது உள்ளம் பூரிப்பாயிற்று.

 

வேதத்திலும் கூட மல்கியா தீர்க்கதரிசிக்குப் பிறகு ஏறக்குறைய 400 வருடங்களாக "கர்த்தர் உரைக்கிறார்" என்ற வார்த்தையைச் சொல்ல ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. பக்தியுள்ள இராஜாக்களும் இல்லை. வேதத்தில் இது இருண்டகாலமாகக் காணப்பட்டது. இக்காலகட்டத்தில் திடீரென்று பரலோகத்திலிருந்து ஒரு நற்செய்தி வருகிறது. தேவக்குமாரனாகிய இயேசு முழு உலகத்துக்காகவும் தன்னையே கொடுக்கும்படி இரட்சகராய் பிறந்திருக்கிறார் என்பதே அந்த நற்செய்தி! "தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்" (நீதி.25:25)

 

பிரியமானவர்களே! நாமும் கூட நற்செய்தியை விரும்புவோம் ஒவ்வொருநாளும் நாம் வேதம் வாசிக்கும் போது கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைக்கிற சொல்ல முடியாத ஈவுகள், ஆசீர்வாதங்கள், மேன்மைகளை அறிந்து கொள்வோம். எனவே வேதத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் பரலோகத்திலிருந்து நற்செய்திகளை எதிர்பார்ப்போம். அது பாவத்தினால் கிடைக்கிற அற்ப சந்தோஷம் அல்ல, பணத்தினால் வாங்கக் கூடிய தற்காலிக சமாதானமும் அல்ல!

 

நாமும் கூட ஒரு நாள் இந்த இயேசு என்கிற நற்செய்தி இல்லாமல் இருளிலும், பாவத்திலும், சாபத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தோம். நமக்கு இந்த நற்செய்தி கிடைத்தவுடனே நம்முடைய வாழ்வு மகிழ்ச்சியாய் மாறியது. ஆனால் இன்றளவும் கூட நற்செய்தியை கேள்விப்படாமலும், நற்செய்தியினால் உண்டாகும் சந்தோஷத்தை அனுபவியாமலும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஜனங்களுக்கு இந்த நற்செய்தியை சுமந்து கொண்டு சென்று அறிவிக்க ஆயத்தமா? இன்றே செயல்படுவோம்!

- Mrs. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

இயேசுவின் சந்ததி என்னும் சிறுபிள்ளைகளுக்காக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al