Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.12.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 16-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 16.12.2023

 

கிறிஸ்துமஸ் தீவு

 

"…பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது" - சங்கீதம் 97:1

 

ஆஸ்திரேலியாவின் மேற்பகுதியில் உள்ள தீவில் வாழும் சிவப்பு நண்டு என்னும் அரியவகை நண்டுகள் காடுகளில் வசிப்பவை. மழைக்காலத்தின் தொடக்கத்தில் இவைகள் பல மைல் தூரம் கடந்து கடற்கரையை நோக்கி பயணம் செய்கின்றன. ஆபத்தான பயணம்தான். பறவைகள், மனிதர்கள், சாலைகளில் செல்லும் வாகனங்கள், உயிரிழப்புகள் இப்படி பல ஆபத்துக்களை கடந்து சென்று தங்கள் இனத்தை விருத்தி செய்யவும் காப்பாற்றவும் போராடுகின்றன. கிறிஸ்துமஸ் நாளன்று சிவப்பு நண்டுகள் இனப்பெருக்கம் செய்து பெருகிக் காணப்படும். 1643ம் ஆண்டில் பிரித்தானியா கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த "ரோயல் மேரி" என்ற கப்பலின் கேப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் இத்தீவை கடந்த போது இதற்கு கிறிஸ்துமஸ் தீவு எனப் பெயரிட்டார். இந்த நண்டுகள் போராடி இவ்விடத்தை அடைந்து தங்கள் இனத்தை காப்பாற்றுவதுமன்றி பெருக்கமடையவும் செய்து விட்டன.

 

வேதத்தில் மோசேயும், ஆரோனும் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அடிமைத்தன வாழ்விலிருந்து மீட்டு, காப்பாற்றி, கானானுக்குள் அழைத்துச் செல்லவும், அதனை சுதந்தரிக்கவும், மிகுந்த பிரயாசப்பட்டனர். அதே போல எஸ்தர் ராஜாத்தியும், மொர்தெகாயும் தம்முடைய சொந்த ஜனங்களை மீட்பதற்காகவும் ஆமானின் சதி மோசங்களினின்று அவர்களை காப்பாற்றவும் அவர்கள் எடுத்த பிரயாசங்கள் அதிகம். உபவாசித்து ராஜசமூகத்தில் பரிந்து பேசி, தங்கள் குலத்திற்கு வரும் தீங்கிலிருந்து அவர்களை காப்பாற்றினார்கள். கன்னிமரியாளிடத்தில் பிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவத்திலும், இருளிலும் அடிமைத்தனத்திலும் வாழும் இவ்வுலக மக்களை காப்பதற்காகவும் இரட்சிப்பதற்காகவும், விண்ணுலகம் விட்டு மண்ணுலகிற்கு வந்தார். நம் எல்லோருக்காகவும் ஜீவனையும் கொடுத்தார்.

 

ஆம், பிரியமானவர்களே, பாவ உலகில் வாழும் நம்மை மீட்க கிறிஸ்து நமக்காய் இப்பூமிக்கு வந்தாரே. அவர் அன்பின் தியாகத்தினை உணரும் நாள்தான் கிறிஸ்துமஸ். இந்நாளில் ஆடைகளை எடுத்து, சிறப்பு உணவு வகைகளை செய்து உண்டு நம் குடும்பத்தை மகிழ்ச்சியாக்கும் நாம் ஆண்டவரின் இருதயம் மகிழும்படி ஏதாவது செய்திருக்கிறோமா? பரிசுகளையும், இனிப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் நாம் இயேசுவின் அன்பையும் பகர ஆயத்தமாயிருக்கிறோமா? இயேசுவின் சுவிசேஷமாகிய அவருடைய வேதத்திற்கு தீவுகள் காத்திருக்கும் என்பது எத்தனை உண்மையான வார்த்தை. தங்கள் இனத்தைக் காப்பாற்ற மூன்றறிவு நண்டு மைல் கணக்கில் பயணப்படுமானால் இன்னும் கிறிஸ்துவின் நாமம் அறிவிக்கப்படாத எத்தனை தீவுகளுக்கு நாம் பயணப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது! அவர்களை நித்திய அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? கிறிஸ்துவின் சுவிசேஷம் எங்கும் பரவட்டும். பூமி முழுவதும் அவர் மகிமையால் நிரம்பட்டும். இரட்சிப்பின் சந்தோஷம் உள்ளத்தையும், நமது இல்லத்தையும் நிரப்பட்டும்!! அல்லேலூயா!!!

- Mrs . மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

தெபொராள் ஊழியர்கள் மூலம் நடைபெறும் பணித்தள ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al