Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14.12.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 14-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 14.12.2023

 

வழிநடத்தும் நட்சத்திரம்

 

"…நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது" - மத்தேயு 2:9

 

கிறிஸ்துமஸ் வந்து விட்டது. கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. வீட்டை அலங்கரிப்பதில் முதலில் இடம் பெறுவது ஸ்டார் ஆகும். ஆம், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லாருக்கும் நினைவில் வருவது நட்சத்திரம் தான். ஸ்டாரை வாங்கி வீட்டில் தொங்க விட்ட பின்பு தான் கிறிஸ்துமஸ்க்கான உற்சாகமே வருகிறது. இதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் உண்டு. ஆனால் வேதத்திலிருந்து ஒரு முக்கியமான காரியத்தை நாம் இன்று தியானிப்போம்.

 

மத்தேயு 2ம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் பொழுது இயேசு பிறந்த அந்த நாட்களில் கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று ஏரோது ராஜாவினிடத்தில் கேட்கிறார்கள். இது அவருக்குப் பிடிக்கவில்லை. நான் ஒரு ராஜா இருக்கிறேன், இவர்கள் இன்னொரு ராஜாவைக் குறித்துப் பேசுகிறார்களே என்று கலங்கினான். அவரோடு எருசலேம் நகரத்தாரும் கலங்கினார்கள் என்று பார்க்கிறோம். உடனே ஏரோதுராஜா ஒரு திட்டம் தீட்டுகிறான். தன் உள்ளத்திலே தீய எண்ணத்தை வைத்துக் கொண்டு சாஸ்திரிகளிடத்தில் பொய்யாய்ப் பேசுகிறான். நீங்கள் போய் பிள்ளையைக் கண்டால் எனக்கு சொல்லுங்கள், நானும் வந்து அதை பணிந்து கொள்வேன் என்றான். சாஸ்திரிகள் புறப்பட்டுப் போகிறார்கள். ஆனால் எங்கே போவது? எந்த திசையில் போவது? எந்த ஒரு புரிதலும் இல்லை. வேதத்தில் ஒரு வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. கிழக்கிலே அவர்கள் கண்ட அந்த நட்சத்திரம் அவர்களுக்கு முன்னே சென்றது. ஆகவே சரியான பாதையில் சென்றனர், சரியான இடத்திற்கு சென்றனர். இயேசுவைப் பணிந்து கொண்டு, காணிக்கை செலுத்திய பின்பு தேவ வழிநடத்துதலின்படி தங்கள் தேசத்திற்கு வேறு வழியாய்த் திரும்பிப் போனார்கள்.

 

அன்பானவர்களே, சாஸ்திரிகளை எல்லாவித தீங்கான பாதைக்கும் விலக்கி சரியான திசையில் நடத்திட தேவன் அந்த நட்சத்திரத்தைக் காட்டினார். இன்று நாம் அந்த சாஸ்திரிகளைப் போலத்தான் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்மை தீய பாதையில் நடத்திடவும், மாயையான வழியில் நம்மை நடத்திடவும் இந்த உலகத்தில் அநேக காரியங்கள் உள்ளன. ஆனால் நாம் சரியான பாதையில் நடந்திட, நமக்காக தேவன் கொடுத்திருக்கும் ஒரு விலையேறப் பெற்ற பொக்கிஷம் "பரிசுத்த வேதாகமம்"! கிறிஸ்தவர்களாகிய நாம் தினந்தோறும் வேதத்தை வாசித்து, தியானித்தால் நாம் செல்ல வேண்டிய பாதையை அது நமக்குக் காட்டும். நமது இளம் தலைமுறையினர் இதைக் கடைப்பிடித்தால் அவர்கள் தீயவழியில், தவறான பாதையில் போக மாட்டார்கள் என்பது நிச்சயம்.

- Bro. சங்கர் ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் தார்சாலைகள் மற்றும் பாலம் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al