Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.12.2023
Share:

By Village Missionary Movement

Monday, 11-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 10.12.2023

 

கலக்கமா? குதூகலமா?

 

"…அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” - மத்தேயு 2:10

 

ஜானும், பீட்டரும் ஒரே கல்லூரியில் ஒரே துறையில் பயிலும் மாணவர்கள். ஆனால் இருவரும் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் வித்தியாசம் இருக்கும். ஜான் அன்றன்றே பாடங்களைப் படித்து அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வான். ஆனால் பீட்டரோ எப்பொழுதும் தேர்விற்கு இறுதி நிமிடத்தில் முயற்சி செய்யும் போட்டியாளராகவே இருப்பான். அவர்களது செமஸ்டர் தேர்விற்கு ஒரு மாத கால இடைவெளி இருந்த நேரத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. இப்பொழுதோ அதற்கு ஒரு வார காலமே இருந்தது. ஜானிற்கோ நல்ல மதிப்பெண்களைப் பெற்று விடலாம் என்ற குதூகலம், ஒன்றுமே படித்து வைத்திராத பீட்டருக்கோ ஒரு வாரத்தில் அத்தனை பெரிய புத்தகத்தை முழுவதும் படித்துவிட முடியுமா என்ற கலக்கம்!

 

இதே போன்று ஏரோதுராஜா காலத்தில் இயேசுவின் பிறப்பு சாஸ்திரிகள் மூலம் அறிவிக்கப்பட்டது. (மத்தேயு 2:3) ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது அவனும், அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவனது கலக்கம் அவனை தேவத்திட்டத்திற்கு எதிராக செயல்பட வைத்தது. அவன் யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைக் காண விரும்பவில்லை. மாறாக அவரைக் கொலை செய்யத் திட்டம் பண்ணினான்.

 

ஆனால் கிறிஸ்துவின் பிறப்பை நட்சத்திரத்தினால் கணித்த சாஸ்திரிகளுக்கு அது குதூகலத்தைக் கொடுத்தது. உடனே அவரைக் காண வேண்டும் என்று வாஞ்சையைத் தந்தது. அது அவர்களை தேவத்திட்டத்திற்கு நேராய் நடத்தியது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைத் தவறவிட்டதால், மனிதர்களின் உதவியை நாடிப் போய் அதில் தோற்றுப் போனாலும், முயற்சியைக் கைவிடவில்லை. அதே நட்சத்திரம் மீண்டும் அவர்களுக்குத் தென்பட்டு அது நகரத் தொடங்கியது. பிள்ளை இருக்கும் ஸ்தலத்தில் போய் சேர்ந்தது. அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

 

பிரியமானவர்களே! நமக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நம்மை நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாய் கிறிஸ்து வரப்போகிறார் என்பதை நாம் அறிந்தும் நிர்விசாரமாய் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் உலகக் காரியங்களில் உழன்று கொண்டிருப்போமானல் அவரது வருகை நம் மனதில் ஒரு கலக்கத்தையே உண்டாக்கும்! கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாம் அவரை கலக்கத்தோடா, குதூகலத்தோடா, எப்படி சந்திக்க தீர்மானிக்கப் போகிறோம்?

- Mrs. சினில்டா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவ ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş