By Village Missionary Movement
Sunday, 10-Dec-2023இன்றைய தியானம்(Tamil) 10.12.2023 (Kids Special)
அலங்காரம்
"…கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." - கொலோசெயர் 3:13
ஹாய் குட்டி செல்லங்களே! X-mas பக்கத்துல வரப்போகுது. ரொம்ப சந்தோஷமா இருக்குதா? வீட்டையெல்லாம் அலங்காரம் பண்ணி, Star எல்லாம் கட்டியாச்சா? சிலர் குடில் வைத்து X- mas- க்கு கலர்கலரா சீரியல் லைட் போட்டு சும்மா ஜம்முன்னு அலங்காரம் பண்ணியிருப்பீங்க இல்லையா? ரொம்ப நல்லதுதான். அதேப்போல நம்ம உள்ளத்தை அலங்காரம் பண்ணுவதும் இயேசப்பா பார்வையில ரொம்ப ரொம்ப முக்கியம். ஓகே, இன்னைக்கும் ஒரு கதை கேட்கலாமா?
ரீட்டா, ராணி என்ற இரண்டு தோழிகள் இருந்தாங்க. ஸ்கூலுக்கு போனாலும் வீட்டிற்கு வந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்தே தான் இருப்பாங்க, விளையாடுவாங்க. சின்ன சின்ன சண்டை வந்தாலும் உடனே பேசிக் கொள்வார்கள். என்ன குட்டீஸ் நீங்களும் சண்டை போட்டாலும் அதை மறந்து பேசிடுவீங்களா? வெரிகுட். அப்படித்தான் இருக்கணும். ஒருநாள் ரீட்டா சொன்னாள் நாளைக்கு Leave தானே! நாம Park போய் விளையாடலாம். ok நான் கண்டிப்பா வந்து விடுவேன். நாம் ஜாலியா விளையாடலாம் Bye என்று சொல்லி விட்டு அவரவர் வீட்டிற்கு போய் விட்டார்கள்.
அடுத்த நாள் ரீட்டா Park க்கு போய் ரொம்ப நேரம் வெயிட் பண்ணியும் ராணி வரவில்லை. கோபத்தோடு வீட்டுக்கு போனாள் ரீட்டா. இந்த ராணி கூட இனிமேல் பேச மாட்டேன் என்னை ஏமாற்றிவிட்டாள். என்ன வெயிட் பண்ண வச்சுட்டா என்று அவளைத் திட்டிக் கொண்டே இவ எல்லாம் எனக்கு Friend டே கிடையாது. நான் அவள் கூட பேசமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அம்மா வந்தாங்க. என்ன ரீட்டா கண்ணு ரொம்ப கோவமா இருக்கீங்க என்ன ஆச்சு. உன்னோட Friend ராணி இப்பத்தான் அவங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்தாள். நான்தான் மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்தேன். இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு நல்லா அவங்க அம்மாவ கவனித்துக் கொள்கிறாள். ராணியை நினைத்தால் சந்தோஷமாய் இருக்கிறது என்று சொன்னார்கள். அம்மா சொன்னதைக் கேட்டதும் கோவமெல்லாம் பஞ்சாய் பறந்து போனது. ராணி மீது இருந்த கோவம், வெறுப்பு எல்லாம் மாறி ராணியை தவறாக புரிந்து கொண்டேன் இப்பவே அவங்க அம்மாவை பார்த்து விசாரித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி Jet வேகத்தில் கிளம்பினாள் ரீட்டா.
என்ன குட்டீஸ் நீங்களும் மற்றவர்கள் மீது கசப்பு, வெறுப்பு, புரிந்து கொள்ளாமல் கோபத்தோடு இருக்கீங்களா? எதுவாக இருந்தாலும் மன்னிப்பதுதான் சிறந்தது. அதுதான் இயேசப்பா விரும்புகிற அலங்காரம். Jesus -யை சந்தோஷப்படுத்தி அர்த்தமுள்ள X- mas கொண்டாட வாழ்த்துக்கள் குட்டீஸ். HAPPY CHRISTMAS!
- Mrs. ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864