Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  31-03-2021
Share:

By Village Missionary Movement

Wednesday, 31-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  31-03-2021

எது அருமையானது?

”...என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்;…” – அப். 20:24

தென் அமெரிக்காவில் யாருமே செல்ல முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆக்கா இந்தியர்கள் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தன் இனத்தை தவிர வேறு மனிதர்களைக் கண்டால் விஷ அம்புகள் எய்து கொன்று விடுவர். இப்படிப்பட்ட மக்களுக்கு ஆண்டவரை அறிவிக்க தன்னை அர்ப்பணித்தார் ஜிம் எலியட் என்ற வாலிபன். அவர்கள் மொழியைக் கற்றார். அவர்களோடு பழக, அம்மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க ஒரு வழி தேடினார். தன் நண்பர்கள் 4 பேரோடு சேர்ந்து ஒரு சிறு விமானத்திலே அந்த காட்டின் மேல் பறந்து, பரிசுப் பொருட்களை அம்மக்களுக்கு போட்டனர். அம்மக்கள் அதனை சந்தோஷமாக ஏற்றதும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து அக்காட்டுக்குள் நேரில் செல்ல முடிவெடுத்து ஜிம் எலியட்டும், அவரது நண்பர்களும் சென்றனர். கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் அம்மக்கள் அவரை விஷ அம்புகள் எய்து கொன்றனர். இருப்பினும் இந்த வேதனையின் மத்தியிலும் அவர்களது மனைவியர் அப்பணியை தொடர்ந்து செய்தனர். இன்று ஆக்கா இனமக்கள் மத்தியிலே சபையும் ஊழியர்களும் உருவாகி வருகிறார்கள். 

இயேசுவின் ஊழியக்காரனான பவுல் எபேசு சபையின் மூப்பரை மிலேத்து என்ற பட்டணத்திற்கு அழைத்து பேசும் போது, என் பிராணனையும் அருமையாக எண்ணேன் என்று சொல்கிறார். பவுல் தன் ஜீவனை விட தேவ அழைப்பை பெரிதாக எண்ணினார். ஆகவே தான் சிறையில் அடைபட்டாலும், மக்கள் எதிர்த்து வந்தாலும், வாரினால் அடிபட்டாலும், கப்பற்சேதம் வந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் ஊழியம் செய்தார். சோர்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடாமல் பல நாடுகளுக்கும் சென்று கொண்டே இருந்தார். மரணத்தையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் தேவ அழைப்பை நான் முழுவதும் நிறைவேற்றினேன் எனக் கூறுகிறார். 

இதை வாசிக்கின்ற நண்பரே, இயேசு கிறிஸ்து பரம் ஏறும்முன் கொடுத்த அழைப்பு நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் அறிவியுங்கள் என்பதே. நீங்கள் அவரது இந்த அழைப்பை எவ்வாறு எண்ணுகிறீர்கள்? ஜிம் எலியட்டும், பவுலும் தேவ அழைப்பை பெரிதாக எண்ணியதால் ஜீவனை பெரிதாக எண்ணாமல் சுவிசேஷம் அறிவித்தனர். இன்று நம் வாழ்வில் எது அருமையானதாக உள்ளது? பணமா, பதவியா, படிப்பா, ஜீவனா அல்லது தேவ அன்பா? உங்கள் பணத்தை மிஷனெரி ஊழியத்திற்கென்று செலவிடலாம். மிஷனெரிகளுக்கென்று ஜெபிக்க உங்கள் நேரத்தை செலவிடலாம். ஏன் நீங்களே மிஷனெரியாக வரலாம். “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்.” ஆமென்.
-    Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரி வாலிபப் பிள்ளைகளுக்கு தேவன் நல்ல வாழ்க்கை துணையை தர ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al