Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.12.2023
Share:

By Village Missionary Movement

Friday, 08-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 08.12.2023

 

கிறிஸ்துமஸ்-ம் ஐக்கியமும்

 

"…மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்" - லூக்கா 2:14

 

கிறிஸ்துமஸ் என்பது ஒரு ஐக்கிய விழா! மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்ள, கிறிஸ்துமஸ் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பைத் தருகிறது. எப்படி, யாரோடெல்லாம் நம் அன்பை பகிர்ந்து கொள்ளலாம் என பார்ப்போமா?

 

தனிமையானவர்களுடன் ஐக்கியம்: வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத முதியவர்களை சந்தித்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு நம் வீட்டு பலகாரங்களையும் சில பழங்களையும் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.

 

சபை விசுவாசிகளோடு ஐக்கியம்: வருடம் முழுவதும் நம் சபையில் பார்க்கும் ஒரு சில கஷ்டப்படும் குடும்பங்களுக்கு, புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தலாம்.

 

அயலகத்தாரோடு ஐக்கியம்: ஒருவேளை நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பீர்கள் என்றால் இந்த தருணத்தை தவற விடாதீர்கள். சில கிறிஸ்துமஸ் பலகாரங்களை எடுத்துக்கொண்டு அதனுடன் கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை தெளிவாக உரைக்கும் கைப்பிரதியையும் கொடுத்து உங்கள் அன்பை பகிர்ந்துகொள்வதோடு, சுவிசேஷம் அறிவித்துவிடலாம்.

 

வேலை ஸ்தலத்திலும் ஐக்கியம்: நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் நாள் மட்டுமல்ல எல்லா நாளுமே உங்களுடைய நடத்தை பிறருக்கு சாட்சி பகருவதாய் இருக்குமானால், அன்று கொடுக்கும் சிறு வெகுமதியும் தேவ அன்பை அறிவிப்பதாயும் இருக்கும்.

 

கிராம மக்களோடு ஐக்கியம்: கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க கிறிஸ்துமஸ் நாட்களை பயன்படுத்தலாம். கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அங்கு சென்றால் நிச்சயம் கூட்டம் கூடுவர். அவர்களுக்கு நற்செய்தி அறிவித்து இனிப்புகள் வழங்கி அவர்களோடு ஐக்கியப்படலாம்.

 

பிரியமானவர்களே! வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகிலே இயந்திரத்தன்மையோடுதான் நாமும் செயல்படவேண்டியதிருக்கிறது. Hai, Bye என்ற அளவில்தான் பிறருடனான உறவு இருக்கிறது. ஆனால் இந்த கிறிஸ்துமஸ் நாட்களிலாவது பிறருடன் ஐக்கியம் கொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். ஷாப்பிங், விருந்து இவைகளில் சிலவற்றை "கட்" பண்ணினாலே நேரமும் காலமும் மிஞ்சுவதைப் பார்ப்பீர்கள். முதல் கிறிஸ்மஸில் யோசேப்பு-மரியாளோடு மேய்ப்பர்கள், சாஸ்திரிகள், தூதர்கள் என பலர் ஐக்கியப்பட்டதைப்போல இந்த கிறிஸ்மஸில் நீங்கள் பலரோடு ஐக்கியப்படுங்கள். இயன்றதை செய்து அவர்களை மகிழ்வியுங்கள். அப்போது ஆண்டவர் மகிமைப்படுவார். 

- T. இராஜன்

 

ஜெபக்குறிப்பு: 

நமது மீடியா ஊழியங்களில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al