Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.12.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 07-Dec-2023

இன்றைய தியானம்(Tamil) 07.12.2023

 

இயேசுவைப் பேசுங்கள்

 

"நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" - அப். 4:20

 

"அபேசியா" என்பது பேசும் ஆற்றலை இழந்து போகும் ஒரு வியாதி. காயத்தினாலோ அல்லது வியாதியாலோ, மூளையிலிருந்து நாவிற்கு அனுப்பப்படும் செய்தி தடைபடும் போது இந்த வியாதி உண்டாகிறது. ஆனால் இந்நாட்களில் ஆவிக்குரிய "அபேசியா" வினால் தாக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு இயேசுவைத் தெரியும், ஆனால் அவரைப்பற்றி ஒரு போதும் பேசமாட்டார்கள். அவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் தெரியும் ஆனால் அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே" என்ற ஆதிக்கிறிஸ்தவர்களின் வைராக்கியத்தை அநேகர் வெளிகாட்டுவதில்லை. அறிவுக்கும் சாட்சிக்கும் இடையே உள்ள தொடர்பு அற்றுப் போயிருக்கும். அக்குறைபாடு சீர்படுத்தப்பட வேண்டும். அநேக நேரங்களில் பயமும், சில வேளைகளில் பாவமும், கிறிஸ்துவை சுதந்திரமாய் அறிவிப்பதற்கு தடையாக இருக்கின்றன. தங்கள் பாவங்களை அறிக்கை செய்து பரிசுத்த ஆவியின் பெலனைச் சார்ந்து இருப்பவர்களே இடைவிடாமல் கிறிஸ்துவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

 

சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் காலத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். கிறிஸ்துமஸ் நாட்களில் இயேசுவை பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் காட்டும் வேகமும், நல்ல ஈடுபாடுகளும் எல்லா நாட்களிலும் காணப்பட்டால் எவ்வளவு நலமாக இருக்கும்! ஒருபக்கம் பார்த்தால் கிறிஸ்துமஸ் நாட்களிலாவது சுவிசேஷம் அறிவிக்கிறார்களே என்ற மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. இயேசுவைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதில் தயக்கமும், கூச்சமும் இருக்கக் கூடாது. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன் என்று இயேசு கூறுகிறார். அப். நடபடிகளில் சீஷர்கள் இயேசுவைக் குறித்து எல்லா இடங்களிலும் தைரியமாய்ப் பேசினார்கள் என்று வாசிக்கின்றோம். பிரியமானவர்களே, நாமும் தைரியமாக பிறரிடம் இயேசுவைக் குறித்து பேசுவோம், இயேசுவைப் போல் அனுதினமும் வாழுவோம். ஆசீர்வதிக்கப்படுவோம்.

- Bro. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஆமென் வில்லேஜ்டிவி சேட்டிலைட் சேனலாக மாற்றப்படவும், கிட்ஸ் சேனல் ஆரம்பிக்கப்படவும் ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al