Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  30-03-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 30-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  30-03-2021

வைராக்கியம் 

“...பக்திவைராக்கியம் காண்பித்ததினால்,… என் உக்கிரத்தைத் திருப்பினான்.” - எண். 25:11

ஒரு புகழ்பெற்ற சினிமாப் பாடகர் ஒருவர் கல்லூரி விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்த உற்சாகத்தில் கல்லூரி மாணவர்கள் அவரிடம் பேச முயன்றனர். ஆனால் அவரோ அவர்களிடம் எதையும் பேச விரும்பவில்லை. அதைக் குறித்து அந்த மாணவர்கள் அவரிடம் கேட்க அவர், “நீங்கள் எல்லாரும் என்னிடம் பேச ஆசைப்படுகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் கன்னா பின்னா என்று பேசி என்னுடைய குரல்வளத்தை குறைத்து விடாமல் இதை சினிமா படத்துரைக்கே அர்ப்பணித்துவிட்டேன். உங்களிடம் அதிகம் பேசினால் மதுரமான குரல் வளத்தை கெடுத்துவிடுவேன் என்னுடைய இனிய நாவின் இனிய நாதத்தை இழந்து போவேன்” என்றாராம். உலக பெயர் புகழுக்காக சினிமா பாடலை பாடுகிற இவருக்கு எத்தனை வைராக்கியம் பாருங்கள். 

ஆனால் வேதத்திலே பினெகாஸ் என்கிற வாலிபன் தேவனுக்காக பக்திவைராக்கியம் பாராட்டி இஸ்ரவேல் ஜனங்கள்மேல் கர்த்தரால் உண்டான வாதையை நிறுத்தினான் என வாசிக்கிறோம். இதனால் ஜனங்கள் காப்பாற்றப்பட்டார்கள். இவர் கர்த்தர் பாராட்டும் நபராகவும் திகழப்பட்டார். அவருடைய சந்ததிக்கே நித்திய ஆசாரியப்பட்டம் தேவனால் வழங்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய மேன்மை பாருங்கள். கர்த்தர் பாராட்டுவது எவ்வளவு மேன்மையான காரியம். மனிதர் நம்மைப் பாராட்டும் போதே எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் பினெகாஸ் பரிசுத்தத்தின் மேல் பக்தி வைராக்கியம் பாராட்டினதால் கர்த்தர் அவனைப் பாராட்டினார்.

அன்பானவர்களே! இப்பொழுதே சிந்திப்போம். நாம் எப்படிப்பட்ட வைராக்கியம் உடையவர்களாக இருக்கிறோம். உலகத்திற்கா அல்லது உன்னத தேவனுக்கா? ஒருவேளை இப்படி நீங்கள் கூறலாம், “முன்பு நான் தேவனுக்காக பக்தி வைராக்கியமாயிருந்தேன். இப்பொழுதோ அனலின்றி இருக்கிறேன்” என்று. கலங்காதீர் மீண்டும் நம்முடைய ஜெபத்திலும் பரிசுத்தத்திலும் கற்பிலும் வைராக்கியமுள்ளவர்களாய் மாறமுடியும். வைராக்கியமாய் வாழவும் முடியும். தேவனிடமிருந்து பினெகாஸைப் போல அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள நிச்சயம் முடியும். முயலுவோம் முன்னேறுவோம். 
-    S. மனோஜ்குமார்

ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபியுங்கள். 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al