Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27.11.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 26-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 27.11.2023

 

பயப்படாதே

 

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்:..." - ஏசாயா 41:10

 

வாலிபன் ஒருவனுக்கு எந்த வியாதியும் இல்லாமல் இருக்கும்போதே தனக்கு எப்போதும் நெஞ்சில் வலியிருப்பதைப் போல ஒரு உணர்வு இருந்தது. சீக்கிரம் மரித்து விடுவோமோ என்று பயம். அதனால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குச் சென்று ECG எடுத்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வான். அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் இவன் வந்தால் ECG எடுக்கத்தான் வருகிறான் என்று ஆரம்பத்தில் அக்கறையாக கவனித்தவர்கள் பிற்பாடு ஒரு வருடகாலமான போது அவனை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். ஏனென்றால் அவனுடைய ECG எப்போதும் நார்மலாக இருக்கும். ஒருநாள் அவன் உண்மையில் நெஞ்சுவலியுடன் வந்தபோது அவனை கவனிப்பார் இல்லை. எல்லாரும் மற்ற நோயாளிகளுடன் பிஸியாக இருந்தபடியால் அவன் எப்போதும் வருகிறவன்தானே என்று மெத்தனமாக இருந்து விட்டார்கள். ஆனால் அவன் உண்மையாகவே நெஞ்சுவலி வந்து அந்த நாளில் மரித்துப் போனான். இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

யோபு சொல்வது போல "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது, நான் அஞ்சினது எனக்கு வந்தது"(யோபு 3:25) என்றபடி அந்த வாலிபனுக்கு நேரிட்டது. இன்னும் சிலருக்கு இந்த வியாதி தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வந்து விடுமோ, இரத்த பரிசோதனை செய்யும் போது ஏதாவது ஒரு லெவல் அதிகமாக வந்துவிட்டால் போதும், உடனே தனக்கு இருதய வியாதி வந்து விடுமோ என்று பயங்கர பயம். இது கிறிஸ்தவர்களையும் அதிகமாய் பாதிக்கிறது என்றால் மிகையாகாது. வியாதி வருவதைக் குறித்து மாத்திரமல்ல அது வந்தால் தாங்கள் சீக்கிரம் மரித்து போய் விடுவோமோ என்பது தான் மிகப் பெரிய பயம். வேதாகமத்தில் அநேக இடங்களில் நீ பயப்படாதே என்று தேவன் சொல்லியிருக்கிறதை நாம் மறந்து விடுகிறோம்.

 

யோபு எல்லாவற்றையும் இழந்த போதிலும் கூட கர்த்தரைப் பார்த்த போது அவர் மேலுள்ள அவரது நம்பிக்கையை அவர் விடவில்லை. எனவே தேவரீர் என் காரியத்தை மேல் போட்டுக்கொண்டு எனக்காகப் பிணைப்படுவீராக (யோபு 17:3) என்கிறார். மேலும் தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2) என்கிறார். நமக்கு ஒரு கஷ்டம் அல்லது ஒரு பயம் வந்ததும் அதுவரை தேவன் நடத்தி வந்த பாதைகள் மற்றும் விதங்களை மறந்து விடுகிறோம். யோபு பயப்படாமல் எல்லா சூழ்நிலைகளையும் எதிர் கொண்டார். அது போல நாமும் கூட எந்த காரியத்திலும் உடனிருந்து நடத்தும் கர்த்தரை பற்றிக் கொள்வோம்.

 

அன்பானவர்களே, எந்த காரியத்தில் உங்களுக்கு பயம் இருக்கிறதோ அதை தேவனிடத்தில் சொல்லுங்கள். உலகத்தில் இருப்பவனைக் காட்டிலும் நம்மோடு இருக்கின்ற இயேசு பெரியவராய் இருக்கிறார். இனி எதைக் குறித்தும் பயப்படாமல் "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்ற விசுவாசத்தோடு வாழப் பழகுவோம். வாழ்க்கையை தைரியமாய் வாழ்வோம். ஆமென்.

- Bro. சிவா

 

ஜெபக்குறிப்பு:  

பணித்தள ஊழியத்திற்கு 25 இரு சக்கர வாகனங்கள் அவசரத் தேவையாயுள்ளது. உதவி செய்யும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş