Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.11.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 26-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 26.11.2023

 

ரோஜாப்பூ

 

"கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்" - சங்கீதம் 13:6

 

ஹாய் குட்டீஸ்! ஸ்கூலுக்கு ஒழுங்கா போய்ட்டு வர்றீங்களா? உங்க எல்லாருக்கும் விதவிதமான செடிகள் வளர்க்கிறது, வீட்டில் தோட்டம் போடுவதெல்லாம் பிடிக்குமா? உங்கள மாதிரி ஜெலினாவுக்கும் பூக்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதை பற்றி கதை கேட்கலாமா?

 

ஜெலினா என்ற குட்டி பாப்பாவுக்கு ரோஜா பூ என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் அவளுக்கு அம்மா ரோஜா செடிகள் வாங்கிக் கொடுத்தார்கள். கலர் கலரான பூக்கள் பூத்ததால் தினமும் தலையில் வைத்து Happy -யா ஸ்கூலுக்கு செல்வாள். தன்னுடைய Friend ஜெஸிக்கும் பூ கொண்டு வந்து கொடுப்பாள். ஜெலினாவோட அம்மாதான் தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவாங்க. களைகளை சுத்தம் செய்வாங்க.

 

ஒருநாள், "ஜெஸி, ஜெலினாவிடம் நீ தினமும் அழகாய் ரோஜா பூ வைத்து கொண்டு வருகிறாயே! உனக்கு பூக்களை கொடுக்கின்ற ரோஜா செடிக்கு நீ என்ன கொடுக்கிறாய்" என்று கேட்டாள். ஜெலினாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, செடிக்கு தண்ணீர் கூட அம்மாதானே ஊற்றுவார்கள். நான் ஒன்றும் செய்ததில்லையே என்று நினைத்தாள். ஸ்கூல் முடிந்ததும் வீட்டிற்கு சென்று ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றினாள். இதை பார்த்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு தினமும் பூ தருகின்ற செடிக்கு நான் ஏதாவது செய்யணும்லம்மா என்றாள். ஆமா, என் செல்ல குட்டியே! நீ சொல்வது உண்மைதான். இதுபோல இயேசப்பாவும் நமக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்காங்க, நாமும் அவருக்கு எதாவது செய்ய வேண்டாமா? நம்ம தெருவில் உள்ள பிள்ளைகளுக்கு Sunday School நடத்துவோம் என்று அம்மா சொன்னதும் ஜெலினா " ஜாலி, ஜாலி" என்று குதித்தாள்.  

 

ஆமென் வில்லேஜ் டிவி ல கூடChildren’s program சூப்பரா இருக்குது. அதைப் பார்த்து கற்றுக் கொடுப்போம் என்று அம்மா சொல்லிக் கொண்டே டிவி யை போட்டாங்க. இயேசுவின் சந்ததி நிகழ்ச்சி வந்ததை பார்த்து நேரம் போனதே தெரியாம 1 மணி நேரம் நிகழ்ச்சியைப் பார்த்து கற்றுக்கொண்டார்கள்.  

 

ஓகே, நமக்காக உயிரையே கொடுத்த இயேசப்பாவுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைவு படுத்திட்டா ஜெலினா. என்ன குட்டி செல்லங்களே, நீங்களும் இயேசுவுக்கு ஏதாவது செய்ய ஆயத்தமா? ஓ ... Super !

- Mrs. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al