By Village Missionary Movement
Thursday, 23-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 24.11.2023
கால தாமதம்
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி…" - 2 பேதுரு 3:9
D.L. மூடி பிரசங்கியார் ஒரு முறை அந்த நாளின் பணி முழுவதையும் நிறைவேற்றி முடித்த பின்னர் களைத்துப் போய் படுத்து உறங்கச் சென்று விட்டார். நள்ளிரவில் தேவன் அவரை எழுப்பி "போய் உன் சமையல்காரனுக்கு சுவிசேஷம் சொல்" என்றார். ஆனால் D.L. மூடியோ களைப்பு மிகுதியால் சோர்வுற்று "நாளை பொழுது விடிந்ததும் சொல்கிறேன்" என்று சொல்லி படுத்து விட்டார். அந்தோ பரிதாபம், காலையில் சென்று பார்த்த போது சமையல்காரன் தற்கொலை செய்து இறந்து கிடந்தான். இதைக் கண்ட D.L. மூடி இதற்கு காரணம் என் காலதாமதம்தான் என்று எண்ணி கண்ணீர் விட்டார்.
வேதத்தில் காலதாமதத்தால் பல ஆசீர்வாதங்களை இழந்தவர்களைக் குறித்து வாசிக்கிறோம். ஏசா தன் தகப்பனுக்கு சமைத்துக் கொண்டு வருவதில் தாமதித்ததால் யாக்கோபு ஏமாற்றி ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறார். லோத்து சோதோமை விட்டு வெளியேற தாமதித்தார். தூதர்கள் அவர்கள் கையைப் பிடித்து பட்டணத்திற்கு வெளியே கொண்டு வந்து விட்டனர் என வாசிக்கிறோம். தீவிரம் தாமதத்தின் விளைவு நன்மையாக முடியவில்லை என்று அறிகிறோம். அதே வேளையில் எஸ்தர் தீவிரமாய் செயல்பட்டதால் யூதகுலம் காப்பாற்றப்பட்டதையும் அறிவோம்.
பிரியமானவர்களே, காலதாமதம் பல ஆசீர்வாதங்களை இழக்க காரணமாகிவிடுகிறது. காலம் தாழ்த்தி செய்யப்படும் எந்த காரியமும் செய்யாமல் இருப்பதற்கு சமமானதே. தாமதமான கீழ்ப்படிதல் கீழ்ப்படியாமைக்கு சமமே! இன்றும் நம்மில் அநேகர் காலம் தாழ்ந்து ஆலயத்திற்குச் செல்வதினால், மற்றும் ஆலயம் சென்றும் ஆராதனையில் கலந்து கொண்டு ஆராதனையை அலட்சியம் செய்வதினால் அநேக நன்மைகளை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம். ஆண்டவருடைய இரண்டாம் வருகை தாமதிக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள்... ஏன் என்றால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். எனவே நாம் தாமதிக்காமல் பரமனின் ராஜ்ஜியத்திற்காக துரிதமாய் செயல்படுவோமா?
- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை சுவிசேஷ ஊழியங்கள் மூலம் ஒவ்வொரு ஆத்துமாக்களுக்கும் கொண்டு செல்ல ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864