Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.11.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 21-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 22.11.2023

 

நெருங்கி…

 

"…பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு,…" - எபிரெயர் 12:1

 

தேவன் நம்மைப் பார்க்கும் போது உள்ளத்தைத் தான் பார்க்கிறார். பாவம் நம் உள்ளத்தைக் கறைப்படுத்துகிறது. உள்ளம் அழுக்கோடும், கறையோடும், அவலட்சணமாய் இருந்தால் எப்படியிருக்கும்? பாவம் அப்படித்தான் நம் உள்ளத்தை மாற்றுகிறது. கைகளினால், கால்களினால் செய்யும் செயல்களினால் மட்டும் இந்த பாவம் நமக்குள் வருவதில்லை. இவை கண்களின் மூலமும், காதுகளின் மூலமாகவும், ஏன், சிந்தனை மூலமாகவும் வருகிறது.

 

சிந்தனை என்று சொல்லும் போது நாம் நினைக்க வேண்டியது "பாவம் எவ்வளவு நெருக்கமாய் உள்ளது" என்று! லேசா சிந்திக்க ஆரம்பித்தால் போதும், நம் கட்டுப்பாட்டை மீறி அது சென்று விடும். நாம் நிஜ உலகை விட்டு கற்பனை உலகிலேயே முழ்கி விடுவோம். தவறான சிந்தனையை தூண்டும் விதமாக phone, youtube, face-book என நம் கைக்குள்ளேயே பல காரியங்கள் இருக்கிறது. நேபுகாத்நேச்சார் நான் கட்டிய மகா பாபிலோன் அல்லவா என சிந்தித்தான், மிருகமாக மாறினான். தாவீது கண்களினால் பார்த்து பாவத்தில் வீழ்ந்தார். சிம்சோன் எல்லாம் தெரிந்தும் செத்த சிங்கத்தின் உடலில் இருந்த தேன் கூட்டை எடுத்து தேனை சாப்பிட்டான், பாவத்தில் வீழ்ந்தான். அடுத்து இச்சையில் வீழ்ந்தான். இப்படியே பாவம் இன்பமாயிருந்து நம்மை ஓட முடியாதபடி விழத்தள்ளி விடும். தூரத்தில் தெரியும் பெரிய பாறை அல்ல, காலருகே கிடக்கும் சிறு கல்லே நாம் இடறி விழச் செய்யும்! அது போல் நம்மை நெருங்கியிருக்கும் பொய், போன் போன்ற சின்ன சின்ன பாவங்களில் தான் நாம் வீழ்வதற்கான வாய்ப்பு உண்டு.

 

இதை வாசிக்கும் அன்பரே! சிறுசிறு பாவங்கள் தானே என அலட்சியமாக இருக்கிறீர்களா? அல்லது நெருங்கி வரும் பாவங்களில் நான் இதுவரை வீழ்ந்து விடவில்லை லேசாக உரசி மட்டும் உள்ளது என்கிறீர்களா? உடனே விலகுங்கள் இல்லாவிட்டால் விபத்துக்குள்ளாக்கிவிடும். நெருங்கியிருக்கும் பாவம் உரசி விடுவதோடு நம்மை விடாது. நம்மில் ஏறி ஆட்கொண்டு நம்மை அமிழ்த்தி விடும். ஜாக்கிரதை. ". . . பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." (எபிரெயர் 12:1)

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:  

பணித்தளங்களில் முழு வேதாகமங்கள் கொடுப்பதற்கு வாங்கி கொடுக்கும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al