Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.11.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 19-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 19.11.2023 (Kids Special)

 

விண்கலம் புறப்பட்டது

 

"உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு" - ஆமோஸ் 4:12

 

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதென்றால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும், அப்படித்தானே குட்டீஸ்? நீங்களும் டிரெயின்ல, பஸ்ல, கார்ல போய் enjoy பண்ணியிருப்பீங்க இல்லையா? நீங்க போகாத இடத்துக்கு ரோஜர் போய்ட்டு வந்ததா சொல்றான், என்னவென்று கேட்கலாமா?

 

ரோஜர் இருக்கிற கிராமத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் இரவு நேரத்தில் விண்கலம் புறப்படப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ரொம்ப சந்தோஷத்தில் இருந்தான். என்ன குட்டீஸ் சந்திராயன் 3 நிலவுக்கு சென்று படம் பிடித்து காட்டியதை உலகமே வியந்து பார்த்ததல்லவா? அதுபோல இந்த ரோஜர்க்கும் விண்கலம் செல்வதை பார்க்க ஆசையாய் இருந்தது. ரோஜரும் அப்பாவும் விண்கலம் புறப்படுவதை நன்கு பார்க்கத்தக்கதான ஓர் இடத்திற்கு வந்து நின்று கொண்டார்கள்.

 

விண்கலம் எவ்வளவு தூரம் போகப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் வானம் முழுவதும் பரவி இருந்தது. ஹய்யா பெரிய தீக்கோளம் போல போகின்றதே என்று கத்திக் கொண்டே குதித்தான். அது மேலே nபுhய் சிறிய சிவப்பு புள்ளியாய் மாறும் வரை பார்த்துக் கொண்டே நின்றார்கள். கூட நின்று பார்த்துக் கொண்டிருந்த நபர் ரோஜர் சந்தோஷப்படுவதை நினைத்து சிரித்துக் கொண்டார். ரோஜர் தோள் மீது கை வைத்து தம்பி இப்பொழுது விண்கலம் சென்ற வானத்தை பார்த்து சந்தோஷப்பட்டோமே! இதைவிட பெரிய சந்தோஷப்படத்தக்க காரியம் ஒன்று நடக்கப் போகிறது. அது நாம் இயேசுவை சந்திக்கின்ற நேரம். அதற்கு நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பதை போல் இருந்தது ரோஜரின் பார்வை. இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று ரோஜர் பரலோகம் செல்லும் வழியை தெரிந்து கொள்ள வேண்டுமே என்று அப்பாவும் பேச்சைத் தொடர்ந்தார். இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாய் வாழும் போதுதான் அவர் வருகையில் நாம் செல்ல முடியும். அவருக்கு பிரியமானவர்கள் தான் மேகத்தில் இயேசுவோடு பறந்து செல்ல முடியும் என்று அப்பா சொன்னதும், விண்கலத்தை பார்க்க சென்ற ரோஜர் இயேசுவின் வருகையை பற்றி தெரிந்து கொண்டது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டான்.

 

என்ன குட்டீஸ், நீங்களும் மேகமீதில் வரும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா? பாவத்தை இயேசப்பாகிட்ட சொல்லி அவர் இரத்தத்தால் கழுவப்பட்டு தினமும் இயேசுவுக்கு பிரியமானதை செய்தால் நீங்க இயேசுவோடு பறந்து செல்வது நிச்சயம். Bye!

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al