By Village Missionary Movement
Monday, 29-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 29-03-2021
அம்மாக்கள் தேவை
“...கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.” -1கொரி. 4:15
இரும்புத்திரை என்று சொல்லப்படுகிற கம்யூனிச தேசங்களில் ஒன்றான ருமேனியாவில் வசனத்தை அறிவித்து அதினிமித்தம் பல பாடுகளையும், சிறைவாசத்தையும் ஏற்று ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட யூத மனிதர்தான் ரிச்சர்ட் உம்பிராண்ட். இவருடைய இரட்சிப்புக்கு காரணமாக இருந்தவர் சாதாரண ஒரு தச்சன்தான். இவர், நான் ஒரு யூதரை கிறிஸ்துவுக்குள் நடத்துவேன் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆம், அப்படியே செய்தும் முடித்தார். ரிச்சர்டை ஏற்றுக்கொண்டு தாயைப்போல அன்பு காண்பித்தார். ஆம், இதுவே அவர் ஆண்டவருக்குள் வர காரணமாக இருந்தது. கிறிஸ்துவின் அன்பை இந்த சாதாரண தச்சனிடத்தில் கண்டார். இந்த அன்புதான் நாத்திகரான ரிச்சர்ட் உம்பிராண்ட் ஆண்டவருடைய அன்பை மற்றவர்களுக்குச் சொல்ல அடித்தளமாக இருந்தது.
ஆம், பிரியமானவர்களே, மோசேயினுடைய தாயும் கூட எகிப்து தேசத்தில் எபிரேயருடைய ஆண் பிள்ளைகள் எல்லாம் கொலை செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் இருந்த போதிலும் தன்னுடைய பிள்ளையை ஒளித்து மூன்று மாதம் காப்பாற்றினாள். அவள் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பொருட்டாக எண்ணவில்லை. மூன்று மாதம் வரையும் அவனை ஒளித்து வைத்திருந்தாள். பின்பு அவன் பத்திரமாய் ஒருவரிடத்தில் சேரும் வரை அதைப் பின்தொடர தன் மகளை அனுப்பினாள். அந்தப் பிள்ளையே பிற்காலத்தில் இஸ்ரவேலருக்கு இரட்சகனாக எழும்பினான். இலட்சம் ஜனங்களை நடத்தும் வல்லவனானான்.
நாம் மேற்கண்ட சம்பவங்களில் பார்த்த இரண்டு பேருக்கும் பின்னால் இருந்து ஏதோ ஒருவர் தாயைப் போல செயல்பட்டார்கள். இன்றைக்கு இப்படிப்பட்ட அம்மாக்கள் தேவை. கிறிஸ்துவை அறிந்தவர்களாகிய நாமும் இயேசுவை அறியாதவர்களுக்கு தாயாக மாறுவோம்! சத்தியத்திலே அவர்களை நடத்துவோம்! கிறிஸ்து அவர்களில் உருவாக கர்ப்ப வேதனைப்பட நம்மை அர்ப்பணிப்போம்! அப்போஸ்தலனாகிய பவுலும் இப்படி எத்தனையோ ஆவிக்குரிய பிள்ளைகளை பெற்றெடுத்தார். நாமும் ஒரு ஆவிக்குரிய தாயாக இருந்து ஆவிக்குரிய பிள்ளைகளை பெற்றெடுப்போம். அவர்கள் உலகத்தை கலக்குபவர்களாக, அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்களாக திகழட்டும்.
- Bro. அனீஸ் ராஜா
ஜெபக்குறிப்பு:
கழுதைகள் கையேடு புத்தகத்தை ஆயத்தப்படுத்தும் ஊழியர்கள் தேவ ஆவியினால் வழி நடத்தப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250