Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.11.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 16-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 16.11.2023

 

இயேசு எப்போதும் நம்மோடு

 

"…உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்…" - எரேமியா1:8

 

வெளிநாட்டைச் சேர்ந்த வில்லியம் என்பவர் தன் மனைவி மேரி டான்னர் என்பவரோடு ஒரு ரயில்வே தண்டவாளப் பாதையை கடந்து கொண்டிருந்தார். திடீரென்று தூரத்தில் ரயில் வருவதைக் கண்டதும் இருவரும் வேகமாக அந்தப் பாதையைக் கடக்க முற்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக மேரி டான்னருடைய கால்களிலொன்று தண்டவாளக் கட்டையில் சிக்கிக் கொண்டது. பதட்டத்தோடு காலை வெளியே எடுக்க அவர் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த கணவரும் தன் மனைவியை காப்பாற்ற முனைந்தார். அதற்குள் ரயில் அருகே வந்து விட்டது. மேரி டான்னர் தன் கணவரைப் பார்த்து, "நீங்கள் தூரமாய் போய் விடுங்கள்" என்று கத்தினாள். ஆனால் வில்லியம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? "நான் உன்னோடுதான் இருக்கப் போகிறேன்." அதுதான் அவர்களின் கடைசி வார்த்தை! இந்தக் காட்சியை பார்த்தவர்களும், இச்செய்தியை கேட்டவர்களும் அந்தக் கணவரின் அன்பை நினைத்து உருகிப் போனார்கள். இதைவிட கோடி மடங்கு அதிகமானது நமது பரம மணவாளனாம் இயேசு இரட்சகரின் அன்பு! நாம் பாவிகளாயிருக்கையில் நமக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு எவ்வளவு பெரிதென்று எண்ணிப் பாருங்கள்.

 

யாக்கோபு எத்தனாய் தன் சகோதரனை, தன் தகப்பனை ஏமாற்றிய போதும் கர்த்தர் கூடவே இருந்தார். தன் சகோதரனுக்குப் பயந்து தன் மாமா வீட்டிற்கு செல்லும் போதும், தனியாய் கல்லை தலைக்கு வைத்து படுத்த போதும் "நான் உன்னோடுதான் இருக்கப் போகிறேன்" என கூடவே இருந்தார். தரிசனத்தைக் கொடுத்து இவ்விடத்திற்கு திரும்பி வரும் வரை இருப்பேன் என்றார். லாபான் வீட்டில் இரு பரிவாரங்களை சம்பாதித்து திரும்பி வருகிறார். அப்போது லாபான் தன் தெய்வங்கள் திருடப்பட்டன என படையோடு வரும்போதும் தேவன் உடனிருந்தார். யாக்கோபு தன் சகோதரனை பயத்தோடு எதிர் கொள்ள செல்லும்போதும் கூட இருந்தார். பயம், திகில், கடின உழைப்பு, நஷ்ட நேரத்திலும் கூடவே இருந்தார். ஏனெனில் வாக்குப் பண்ணினவர் மாறாதவர்.

   

பிரியமானவர்களே, உங்களோடும் தேவன் ஒரு வாக்கு பண்ணியிருக்கிறார். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று! (மத்தேயு 28:20) இந்த தேவன் மாறாதவர். யாக்கோபு தன் சகோதரருக்கு பயந்த போது பலம் குறைந்தது போல் இருந்தது. எனவே தனித்து கர்த்தரிடம் அழுது கெஞ்சியதை போல் நாமும் நமக்கு இக்கட்டான நிலை வரும் போது அவர் "உன்னோடுதான் இருக்கிறேன்" என கூறியதை அறிக்கையிடுங்கள். தேவன் உங்களை பெலப்படுத்துவதை உணருவீர்கள். அல்லேலூயா!!

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

திங்கள் கிழமை தோறும் நம்முடைய வளாகத்தில் நடைபெறும் இரவு ஜெபத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al