By Village Missionary Movement
Wednesday, 15-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 15.11.2023
துதி பாடல்
"…என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக;…" - சங்கீதம் 18:46
ஒரு கப்பலில் 2 ஓய்வு பெற்ற போர் வீரர்கள் பயணித்து கொண்டிருந்தனர். ஒருவர் ஆங்கிலேயர், மற்றொருவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். ஆங்கிலேயர் சிறு பிராயத்தில் தன் தாயினால் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடலை எப்போதும் பாடுவதுண்டு. அந்த பாடலின் வரிகள்: "வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன். கைவிடாமல் நேசத்தால் ஆற்றி தேற்றி தாங்குமேன், நீரே எந்தன் நம்பிக்கை, நீர் எனக்கு சகாயம் செய்குவீர். ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்" இந்தப் பாடலை கப்பல் பயணத்திலும் பாடிக் கொண்டே இருந்தார். இந்த பாடலை கேட்ட ஓய்வுபெற்ற ஜெர்மனிய போர் வீரருக்கு, இதே குரல், இதே பாடல், இரண்டாம் உலகப்போர் நடந்த போது கேட்டிருக்கிறேனே என்பது நினைவிற்கு வந்தது. உடனே அவரிடம் நீங்கள் இரண்டாம் உலகப் போரில் படை வீரராக இருந்தீர்களா? என்று கேட்டார். ஆங்கிலேயர் ஆம் என்று சொன்னதும், உங்களுக்கு எதிராக ஜெர்மானிய படையில் இருந்த நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்தபடியினால் இந்தப் பாடலை நீங்கள் பாடியதைக் கேட்டவுடன் உங்களை சுடாமல் விட்டு விட்டேன் என்றாராம். இருவரும் நெகிழ்ச்சியோடு ஆண்டவரை துதித்தனர். பாருங்கள், ஒருபாடல் அவர் உயிரை காப்பாற்றியிருக்கிறது. அப்படியென்றால் தேவனைத் துதிக்கும் துதி பாடல்களுக்கு அவ்வளவு வல்லமையுண்டா என்று கேட்டால், நிச்சயம் உண்டு! வேதத்தில் கூட ஒரு சம்பவத்தை காணமுடியும்.
யோசபாத் ராஜா யுத்தத்தில் பாடித் துதிக்கும் பாடகரை முன் நிறுத்தினார். அவர்கள் பாடித் துதித்த போது, கர்த்தர் அவர்களுக்கு எதிராய் வந்த ராஜாக்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை எழும்பப் பண்ணினதினால், வெட்டுண்டு வீழ்ந்தார்கள். கர்த்தர் ஜெயம் தந்தார். தாவீது பாடித் துதித்துக் கொண்டிருந்தார். சிங்கம், கரடியிலிருந்து ஆட்டினை மீட்கும் பெலனைத் தேவன் தந்தார். கோலியாத்தை வீழ்த்தினார். சவுலுக்குள்ளிருந்த அசுத்த ஆவி இவரது இசையினால் வெளியேறியது.
இன்றும் கைம்மாறு கருதாமல் காக்கும் நமது இரட்சகர் தூங்காமல் உறங்காமல் அவர் செட்டையில் வைத்து நம்மை பாதுகாத்து வருகிறார். நாம் அறியாத நேரத்திலும் நமக்கு வரவிருந்த தீங்கிலிருந்து நம்மைக் காக்கிற தேவனாய் இருக்கிறார். ஆகவே அவரைத் துதிக்கும் துதி எப்பொழுதும் நம் வாயிலிருக்கட்டும். குடும்பத்தில் எப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலையில் இருந்தாலும், தேவையில் இருந்தாலும் கடன் பிரச்சனையிலிருந்தாலும் பவுல் சீலாவைப் போல பாடித் துதியுங்கள். குடும்ப ஜெபத்தை விடாதிருங்கள். சிறைச்சாலை கதவுகள் தானாய் திறவுண்டதைப் போல அற்புதம் நடக்கும் அல்லேலூயா
- Mr. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் உட்பட நமது அனைத்து பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864