Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.11.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 11-Nov-2023

இன்றைய தியானம்(Tamil) 12.11.2023 (Kids Special)

 

Bread and Butter

 

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" - லூக்கா 6:41

 

"அம்மா, அம்மா ரொம்ப பசிக்குது; Bread and Butter வச்சு தாங்கம்மா" என்று School முடிந்து வீட்டிற்கு வந்த ஆக்னஸ் கேட்டாள். அம்மாவும் உடனே செய்து கொடுத்தார்கள். ஆக்னஸ் சுவைத்து சாப்பிட்டு விட்டு அம்மா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு விளையாடப் போய் விட்டாள். என்ன குட்டீஸ், உங்களுக்கும் Butter வைத்த Bread னா ரொம்ப பிடிக்கும்தானே. சரி, கதைக்குள்ளே போகலாமா?

 

தினமும் Butterம் Breadம் வாங்குகின்ற ரொட்டி கடைக்காரரிடம் போய் ஆக்னஸ் அம்மா, "ஏன் எப்பவுமே உங்க கடையிலே வாங்குகின்ற Butter அளவு குறைவாகவே இருக்கிறது" என்று கேட்டாள். இவர்களைப் போலவே அந்த கடையில் வாங்குகின்ற நிறைய பேர் கேட்டார்கள். உடனே வழக்கமாய் இவர் கடைக்கு Butter கொண்டு வருகின்ற நபர் மேல் சந்தேகம் வந்தது. மறுநாள் ரெவவநச கொண்டு வந்தவரிடம், "நீ என்னை இவ்வளவு நாட்களாக ஏமாற்றியிருக்கிறாய், Butter அளவை குறைத்து பாக்கெட் போட்டு எனக்கு கொண்டு வந்திருக்கிறாய்" என்று சண்டை போட்டார். உடனே அவர் பொறுமையாக, "இல்லை சரியாகத்தான் எடைபோட்டுக் கொண்டு வருகிறேன்" என்றான். உடனே ஊர் மக்களும் இந்த கடைக்காரனுக்கு சப்போர்ட் பண்ணி Butter வியாபாரியை திட்டி கடைசியில் அந்த பிரச்சனையை ஊர் தலைவரிடம் கொண்டு சென்றார்கள். ஊர் தலைவரும் நிறுத்துப் பார்த்தார். 1/4 கிலோ பாக்கெட்டில் 50 கிராம் குறைவாகத்தான் இருந்தது. உடனே ஊர் தலைவரும் கோபமடைந்து, "நீ எங்கள் எல்லோரையும் முட்டாள் ஆக்குகிறாயா. இனிமேல் இந்த ஊர்ப்பக்கம் வந்து விடாதே" என்று கோபத்துடன் திட்டினார். உடனே Butter வியாபாரி "ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்னிடம் தராசில் வைத்து நிறுக்கும் படிக்கற்கள் கிடையாது. இந்த Bread கடைக்காரர் கடையில் உள்ள 1/4 கிலோ ரொட்டி பாக்கெட்டுகளை வைத்துத்தான் நான் எடைபோட்டு இந்த Butter பாக்கெட்டுகளை போடுகிறேன்" என்று சொல்லி, தராசை எடுத்து ஒருபக்கம் ரொட்டி பாக்கொட்டையும், மறுபக்கம் Butter பாக்கெட்டையும் வைத்து நிறுத்தான். இரண்டும் சமமாக இருந்தது. உடனே எல்லோரும் அந்த Bread கடைக்காரனைப் பார்த்து, " நீ குறைவாக எடைபோட்டு விற்றுவிட்டு அடுத்தவன் மேல் பழி சுமத்துகிறாயா?" என்று அவனை திட்டி விட்டு கிளம்பினார்கள். இவனும் தலைகுனிந்தவாறே வெட்கத்துடன் வீடு திரும்பினான்.

 

தம்பி, தங்கச்சி பார்த்தாயா! அவன் செய்த தவறை மறைத்து வைத்து விட்டு அடுத்தவன் மேல் பழி சுமத்தினதினாலே எல்லோருக்கும் முன்பாகவும் எப்படி வெட்கப்பட்டு போனான்! இது போலத்தான் நீயும் எப்போதும் மற்றவர்களையே பழி சுமத்த கூடாது. எப்போதும் நம்மை சரிசெய்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். Ok வா. Bye!

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş